ஓசூர் மாநகராட்சி பேருந்து நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்க்கொண்ட மாநகர மேயர் ஆணையர்*

*ஓசூர் மாநகராட்சி பேருந்து நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்க்கொண்ட மாநகர மேயர் ஆணையர்*

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி, தமிழகத்தின் மாநில எல்லை மற்றும் தொழில் நகரம் என்பதால் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் தொழில், வியாபாரம், தொழிற்சாலைகளுக்கு என வந்து செல்கின்றனர்

தினமும் பல்லாயிரக்கணக்கானோர், ஓசூர் மாநகரில் உள்ள அப்பாவு பிள்ளை பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் நிலையில் 

ஓசூர் மாநகராட்சி மேயர் S.A.சத்யா, ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் சிநோகா ஆகியோர் அதிகாரிகளுடன் ஓசூர் பேருந்து நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது பேருந்து நிலையத்தில் கழிவறை, குடிநீர், பயணிகள் அமருமிடம், சாலையோர கடைகள், நடைபாதை உள்ளிட்டவற்றை பார்வையிட்டு  அதிகாரிகளுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி செயற்பொறியாளர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மாமன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

* K.B. சிவ பிரகாஷ் ஓசூர்-நிருபர். ,