ஓசூர் அருகே தனியார் ரிசார்ட்டில் சுற்றி திரியும் சிறுத்தை... அச்சமடைந்த 20கும் மேற்பட்ட கிராம மக்கள்....

 ஓசூர் அருகே தனியார் ரிசார்ட்டில் சுற்றி திரியும் சிறுத்தை... அச்சமடைந்த 20கும் மேற்பட்ட கிராம மக்கள்....

ஓசூர் அருகே கடந்த ஒரு வாரமாக ஒரு தனியாருக்கு சொந்தமான ரிசார்ட்டில் சிறுத்தை நடமாட்டத்தால் ரிசல்ட் அருகே உள்ள 20கும் மேற்பட்ட கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

 கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே  இஸ்லாம்பூர் அருகே 2000 ஏக்கர் பரப்பளவில் ஒரு தனியார் ரிசார்ட்  செயல்பட்டு வருகிறது.கடந்த ஒரு வாரத்துக்கு முன் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு சிறுத்தை ரிசார்டுக்குள் புகுந்து ரிசார்ட்டில் ஒரு வளர்ப்பு நாயை கடித்து குதறியது. இந்த நிலையில் ரிசார்ட்டில் பணிபுரியும் ஊழியர்கள் தேன்கனிக்கோட்டை வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். 

விரைந்து வந்த வனத்துறையினர்  சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு ரிசார்ட் பின்புறமுள்ள ஒரு பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை பார்த்த வனத்துறையினர் அதனை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக சிறுத்தை பிடிக்க ரிசார்ட் பின்புறம் உள்ள வனப்பகுதியில் இரும்பு கூடு வைக்கப்பட்டு சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க அங்கு சி சி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள.இந்த நிலையில் நேற்று இரவு கூண்டு அருகே வந்த சிறுத்தை கூண்டுக்குள் செல்லாமல் அங்கிருந்து தப்பி சென்ற காட்சிகள் அங்கு ஏற்பாடு செய்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது.கடந்த ஒரு வாரமாக ரிசார்ட் பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தை இரவு நேரங்களில் அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று விவசாயிகள் வளர்க்கப்படும் ஆடுகளை இழுத்துச் செல்வதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர் .ரிசார்ட் பகுதியில் சுற்றிவரும் சிறுத்தையை உடனடியாக பிடித்து அதனை அடர்ந்த வனப் பகுதியில் விடுமாறு சுற்றுவட்டார கிராம மக்கள் வனத்துறையினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

B. S. Prakash 

B. S. Prakash