பிரம்மாண்ட செட் அமைத்து அதில் ராஜா போல் அமைக்கப்பட்டுள்ள காந்தாரா விநாயகர்
ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டையில் காந்தாரா திரைப்பட காட்சிகளை போன்று பிரம்மாண்ட செட் அமைத்து அதில் ராஜா போல் அமைக்கப்பட்டுள்ள காந்தாரா விநாயகர் பலரின் கவனத்தை ஈர்த்து வருகின்றது...
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டையில் ஆண்டுதோறும் சினிமா திரைப்படங்களை மையமாக கொண்டு செட் அமைத்து பிரம்மாண்டமான முறையில் விநாயகர் சதுர்த்தியை பலரும் வியக்க வைக்கும் வகையில் கொண்டாடுவது வழக்கம். இதுவரை பாகுபலி, அத்திவரதர், KGF உள்ளிட்ட விநாயகர்களை அமைத்திருந்த நிலையில் இந்தாண்டு காந்தாரா திரைப்படத்தை மையமாக கொண்டு விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளன.
நான்கு பற்களை கொண்ட,வராஹா ரூபம், ராட்சத பன்றியின் முன்னங் கால்களுக்கு இடையே நுழைந்து செல்வது போல பிரம்மாண்ட நுழைவு வாயில் அமைத்து இருந்தனர். அந்த நுழைவு வாயில் வழியாக உள்ளே சென்றால் படிகட்டுகளில் அமர்ந்து 10 அடி உயரத்தில் பஞ்சுருளி தேவன்இரண்டு கைகளிலும் தீப்பந்தம் கையில் ஏந்தி மிரட்டுவது போல் செட் அமைக்கப்பட்டுள்ளன.
பின்னர், வலதுபுறமாக சென்றால் காந்தாரா திரைப்படத்தில் மனநிறைவை தேடி காட்டிற்குள் செல்லும் ராஜா, பழங்குடியின தெய்வமான பஞ்சுருளி தேவனை பார்க்கும் காட்சியினை தத்ரூபமாக உணர வேண்டும் என்பதற்காக சத்தத்துடன் சுழலும் பன்றியும், வலதுபுறமாக வந்து வந்து செல்லும் பஞ்சுருளி தேவன் ஆகியவை பார்வையாளர்களை மிரட்டும் வகையில் வைக்கப்பட்டுள்ளன.
காட்டில் பஞ்சுருளி தேவனை பார்த்து, அதனை ராஜா வேலையாட்களுடன் கல்லால் ஆன தெய்வத்தை எடுத்து செல்லும் காட்சியை போன்றும், ராஜா வேடத்தில் விநாயகர் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். வசூல் சாதனை படைத்து அனைவரிடமும் பிரபலமான காந்தாரா திரைப்படத்தின் காட்சிகளை போல செட் அமைத்து, அதில், ராஜா போல் அமைக்கப்பட்டுள்ள விநாயகர் மற்றும் காட்சிகளை பலரும் வியப்புடனும் ஆர்வமாகவும் பார்த்து வருகின்றனர். குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்திலேயே மிகப் பிரமாண்டமாக இதுபோன்று செய்துள்ளது தேன்கனிக்கோட்டையில் காந்தாரா திரைப்பட காட்சிகளை போன்று பிரம்மாண்ட செட் அமைத்து அதில் ராஜா போல் அமைக்கப்பட்டுள்ள காந்தாரா விநாயகர் பலரின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்...
B. S. Prakash