தேன்கனிக்கோட்டையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்

 தேன்கனிக்கோட்டையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நேற்று நடந்தது. இதில் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் மலர்வண்ணன் தலைமை வகித்தார், செயலாளர் அரவிந்தகுமார் பொருளாலர் சரிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நீதித்துறையில் பெண்களுக்கு 33 சதவித இடஒதுக்கீட்டை மத்திய அரசு அமுல் படுத்த கோரியும், உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்திற்கு தரவேண்டிய காவிரி தண்ணிரை திறந்துவிடாத கர்நாடக அரசை கண்டித்தும், கர்நாடகாவில்  தமிழக

 முதல்வரின் உருவபடத்தை அவமதிப்பதை கண்டித்தும், கர்நாடகாவில் அப்பாவி தமிழர்களை தாக்கபடுவதை கண்டித்தும் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நேற்று நடந்தது.

இதில் ராமபிரசாத், ரமணன், ஜெய் சங்கரன், சீனிவாசன், லூர்துசாமி, சதிஷ்குமார், சித்ரா, அனிதா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

B. S. Prakash