ஏழை எளிய பொதுமக்களுக்கு இலவசமாக கண் கண்ணாடிகள் வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்

ஏழை எளிய பொதுமக்களுக்கு இலவசமாக கண் கண்ணாடிகள் வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்*

ஓசூர் அருகே உள்ள கெலமங்கலம் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் இலவச கண் கண்ணாடிகள் வழங்கும்  நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ராஜேஷ்குமார், தளி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் டி இராமச்சந்திரன் ஆகியோர் கிராமப்புறங்களில் வாழும் 250 ஏழை எளிய பார்வைத்திறன் குறைபாடு உள்ள பொது மக்களுக்கு இலவசமாக கண் கண்ணாடிகளை வழங்கினர். தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பால தொட்டனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் 250 பேருக்கும் இலவசமாக தனது சொந்த செலவில் கண் கண்ணாடிகளை வழங்கினார். கண்ணாடிகளை பெற்று கொண்ட பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்

இந்த நிகழ்ச்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் செவிலியர்கள் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

: இதற்காக மூன்று மாதங்களாக பல்வேறு கிராமங்களில் முகாம்கள் நடத்தி    கண் பரிசோதனை சேர்ந்து அவர்கள் ஏற்ற மாதிரி கண்ணாடிகளை தயாரித்து  பல்வேறு கிராமங்களில் ராயக்கோட்டை  நாகமங்கலம். அணு சோணை .உளுகுறிக்கு.

 டி பேலூர், நெமிலேறி அனுமந்தபுரம் மலை கிராமங்கள் ஆன 

 பெட்ட முகிலாலம் .முனி செட்டி  கிராமங்களில் கண் பரிசோதனை மருத்துவர் டேவிட் தலைமையில் குழு அமைத்து தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இன்று மூக்கு கண்ணாடி இலவசமாக வழங்கப்பட்டது .

இதில் ஒன்றிய குழு துணை தலைவர் சீனிவாசன் ஒன்றிய கவுன்சிலர்கள் பிரபா ஜெயராமன், பிரசாந்த்.

  பேரூராட்சி தலைவர் தேவராஜ், ஊராட்சித் தலைவர்கள் கிருஷ்ணப்பா கோவிந்தப்பா ஈஸ்வரி முத்தன் மஞ்சுளா வைரப்பா C.P.|.ஒன்றிய செயலாளர் தமிழ் குமார் மற்றும் பொதுமக்கள் சமூக சேவர்கள் ஏராளமானவர் கலந்து கொண்டார்கள்.

B S Prakash Thally