கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான ATM

கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான ATM

 கிருஷ்ணகிரி அருகே உள்ள குத்தாரப்பள்ளியில் கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான ATM கார்டு மற்றும் தகவல் கையோட்டினை தமிழக விளையட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பயணிகளுக்கு வழங்கி மகளிர் முன்னேற்றத்திற்காக பல்வே திட்டங்களை செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

................................................

கிருஷ்ணகிரி அருகே உள்ள குத்தாரப்பள்ளியில் கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான ATM கார்டு மற்றும் தகவல் கையோடு வழங்கும் விழா நடைப்பெற்றது,

மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி சரயு தலைமையில் நடைப்பெற்ற இந்த விழாவிற்கு தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லக் குமார்

சட்டமன்ற உறுப்பினர்களான  மதியழகன், பிரகாஷ், ராமசந்திரன்

மேயர் சத்தியா ஆகியோர் முன்னிலை வகித்தனார்,

மேலும் இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்துக்

கொண்டு தமிழக முதல்வரின் சீரிய திட்டங்களில் ஒன்றான கலைஞர் மகளிர் உரிமை தொகை பெறுவதற்கான ATM கார்டு மற்றும் தகவல் கையேட்டினை 500 பயனாளிகளுக்கு வழங்கி சிறப்புரை ஆற்றினார்

அப்போது தனது சிறப்புரையின் போது ஏற்கனவே தமிழக முதல்வர் கடந்த 15ம் தேதி காஞ்சிபுரத்தில் இந்த சிறப்புமிக்கத் திட்டத்தினை துவக்கிவைத்துள்ளார்,

இந்தத் திட்டத்தினைத் தொடர்ந்து தற்போது கிருஷ்ணகிரியல் துவக்கி வைப்பதில் நான் பெருமைக் கொள்வதாக தெரிவித்தார்.

மேலும் இந்த சிறப்பு மிக்கத் திட்டத்தினை பல்வேறு மாநிலங்களும் தற்போது பின்பற்ற துவங்கி உள்ளதாக தெரிவித்தார், குறிப்பாக தமிழக முதல்வர் மகளீர் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை

 செயல்படுத்தி வருவதால் அவர்களின் வாழ்வாதரம் உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டார்,

இந்த விழாவின்போது அனைத்து துறை அதிகாரிகளும், உள்ளாட்சி பிரதிநிதிகளும் கலந்துக்கொண்டனர்கள்.