தளிப்பகுதியில் தொடர் மின்வெட்டை கண்டித்து தளி பாஜக சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

 தளிப்பகுதியில் தொடர் மின்வெட்டை கண்டித்து  தளி பாஜக சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி மற்றம் ஒன்றியத்திற்க்குட்பட்ட கிராமங்களில் சீரான முறையில் மின்சாரம் வழங்குவதில்லை, அடிக்கடி மின்தடை ஏற்ப்பட்டு விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பையும், நஷ்டத்தையும் ஏற்ப்பட்டுள்ளது, விவசாயிகளுக்கு தட்கல் திட்டத்தின் கீழ் பணம் செலுத்தி ஒரு ஆண்டுகள் ஆகியும் மின்சார இணைப்பு தராமல் இழுத்தடித்து கொண்டிருக்கப்பட்டு வருகிறது, பல முறை அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினாலும், மின்வாரிய அலுவலகம் முன்பாக அதிகாரிகளை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர். ஒன்றிய தலைவர் ஹரிஷ் தலைமையில்ஆர்பாட்டம் நடைப்பெற்றது, இதில் ஒன்றிய செயலாளர் மார்க்கண்டேயா, மாவட்ட துணை தலைவர் ராஜன்னா, பார்த்திபன், மருத்துவ அணி மாவட்ட தலைவர் டாக்டர் நகேஷ், மற்றும் சிவகுமார், நகர ஒன்றிய பொருப்பாளர்கள், ஊர் பொதுமக்கள், பெண்கள் உட்பட பலர் இந்த கண்டன ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

B S Prakash Thally: