ஓசூரில் புரட்சித்தாய் சின்னம்மா பிறந்த தின கொண்டாட்டம். திருக்கோவில் தர்காவில் சிறப்பு வழிபாடுகள்

 *ஓசூரில் புரட்சித்தாய் சின்னம்மா பிறந்த தின கொண்டாட்டம். திருக்கோவில் தர்காவில் சிறப்பு வழிபாடுகள்.*

மறைந்த மாண்புமிகு அம்மாவின் இதயத் தோழி, மாண்புமிகு புரட்சித்தாய், தியாகத் தலைவி சின்னம்மா அவர்களின் பிறந்தநாள், ஆகஸ்ட் 18ஆம் தேதி இன்று உலகம் முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக பிரமுகர், புரட்சித்தாய் சின்னம்மாவின் விசுவாசியுமான DR. அன்வர்பாஷா தலைமையில் பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் சின்னம்மா பெயரில் அர்ச்சனை செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் அங்கிருந்தவர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. 

இதைத்தொடர்ந்து அதே பகுதியில் அமைந்துள்ள இஸ்லாமியர்களின் தொழுகை மையமான தர்காவில் சின்னம்மாவிற்காக சிறப்பு தொழுகைகள் நடத்தப்பட்டு அம்மா அவர்கள் காட்டிய வழியில் சின்னம்மாவின் வெற்றிப் பயணம் தொடர்ந்து வீர நடை போட வேண்டி வழிபாடுகள் நடந்தன.

மேலும் சின்னம்மா அவர்கள் பல்லாண்டு காலம் நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்து வழிபாடுகளை நடத்தினார்கள். இதில் ஏராளமான சின்னம்மாவின் விசுவாசிகள் கலந்து கொண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.