பரிமளம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா விழிப்புணர்வு பேரணி

 பரிமளம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா விழிப்புணர்வு பேரணி



கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், பரிமளம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. "சாலை பாதுகாப்பு மற்றும் புகையிலை இல்லா தேசம்" என்பதை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய். பிரகாஷ், மாநகர மேயர் எஸ். ஏ. சத்யா ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில் பள்ளியில் தாளாளர் டாக்டர் தீபா மற்றும் பள்ளி முதல்வர் திருமதி பவானி சங்கரி, ஆசிரியை, ஆசிரியர்கள், பள்ளியின் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.