தளி சட்டமன்றத் தொகுதி பள்ளப்பள்ளி மற்றும் காரண்டப்பள்ளி ஊராட்சிகளில்

  தளி சட்டமன்றத் தொகுதி பள்ளப்பள்ளி மற்றும் காரண்டப்பள்ளி ஊராட்சிகளில்

தளி சட்டமன்றத் தொகுதி பள்ளப்பள்ளி மற்றும் காரண்டப்பள்ளி ஊராட்சிகளில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக மின் விளக்குகள், தெரு விளக்குகள், விவசாய பம்ப் செட்கள் சரியாக இயங்கவில்லை என கடந்த மாதம் பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினர் அவர்களிடம் முறையிட்டதின் காரணமாக உடனடியாக செயற்பொறியாளர் மின்சார வாரிய அதிகாரி அவர்களை தொடர்பு கொண்டு உயர் மின்னழுத்த மின்மாற்றி அமைக்குமாறு வலியுறுத்தினார்.

மின்சார வாரிய அதிகாரிகள் பள்ளப்பள்ளி ஊராட்சி பள்ளப்பள்ளி கிராமத்திலும், காரண்டப்பள்ளி ஊராட்சியில் பாலேஹக், கே.ஹோசூர் கிராமங்களில் உயர் அழுத்த மின்மாற்றி அமைத்தனர். 

இன்று 09.08.23 தளி சட்டமன்ற உறுப்பினர் T.இராமச்சந்திரன் B.Sc.,LLB.,MLA அவர்கள் ஓன்றிய கவுனசிலர் பிரசாந்த்  மூன்று உயர் மின்னழுத்த மின்மாற்றிகளையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.

மிக விரைவாக பணிகளை முடித்த மின்சார வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

B. S. Prakash