வனவிலங்குகளால் சேதமாகும் விளை பயிர்கள் : வனத்துறையை கண்டித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

*வனவிலங்குகளால் சேதமாகும் விளை பயிர்கள் : வனத்துறையை கண்டித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்*

ஓசூர் அருகே உள்ள தளியில் வனத்துறை அலுவலகம் முன்பு வனவிலங்குகளால் சேதமாகும் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜக சார்பில் தமிழக அரசு மற்றும் வனத்துறையினரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தளி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளால் அதிக அளவில் விளை பயிர்கள் சேதப்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் காட்டு யானைகள் தாக்கி உயிரிழந்தும் வருகின்றனர். வனவிலங்குகள் தாக்கி உயிரிழக்கும் குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடாக 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும், காட்டு யானைகளை கட்டுப்படுத்தி விவசாயத்தை காக்க வேண்டும், விவசாயிகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் காட்டு பன்றிகளை கேரளா மற்றும் ஆந்திரா மாநிலங்களை போல வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும், காட்டு பன்றிகளை வேட்டையாட அனுமதிக்க வேண்டும், வனவிலங்குகளால் சேதமாகும் பயிர் சேதாரங்களுக்கு உடனடியாக சந்தை மதிப்பீட்டில் இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தளி வனத்துறை அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.  அதன் பின்னர் அங்கிருந்து அனைவரும் கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக தளி வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்றனர். பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தளி பகுதியில் உள்ள மலை கிராமங்களான கீஜனகுப்பம், செத்திரம் தொட்டி, ஆச்சுபாலு, அன்னியாலம், கொடகாரெட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு பேருந்து வசதி செய்து கொடுக்க வேண்டும், தளி பஞ்சாயத்து கொட்டபாலம் மற்றும் பாசவானபுரம் ஆகிய கிராமங்களுக்கு சாலை வசதி செய்து கொடுக்க வேண்டும், ஜவளகிரி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் சூரிய சக்தி மின்வேலி அமைத்து காட்டு யானைகளை கட்டுப்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்கள் எழுப்பப்பட்டன.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் மகளிர் அணியினர் கலந்து கொண்டனர். இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தளி வனத்துறை மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் பாஜகவினர் மனு வழங்கினர்.

தளி வனத்துறை அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தளி ஒன்றிய தலைவர்ஹரிஷ் தலைமை வகித்தார் ஒன்றியதலைவர்கள் சிவக்குமார் கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாவட்ட தலைவர் நாகராஜ்  விவசாய அணி மாநில துணை தலைவர் கோவிந்த ரெட்டி எஸ்.டி அணி மாநில செயலாளர் பாப்பணனா மாவட்ட ட துணை தலைவர் சீனிவாச ரெட்டி மாவட்ட பொருலாளர் சீனிவாசன மாவட்ட மருந்துவ அணி தலைவர் நாகேஷ் குமார