போத்தி நாயன பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் 76 வது சுதந்திர தின விழா

போத்தி நாயன பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் 76 வது சுதந்திர தின விழா

 *கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே உள்ள போத்தி நாயன பள்ளியில் இயங்கி வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் 76 வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.*

PTA தலைவர் திரு.பாபு அவர்கள் தேசியக் கொடியை  ஏற்றினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.ரகு வரவேற்புரை ஆற்றினார். கடந்த ஆண்டு நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் இப்பள்ளியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த அவர்களுக்கு தலா 3000, 2000,1000 மும் இதர மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. விளையாட்டுப் போட்டிகள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாசவி கிளப் உறுப்பினர்கள் பரிசுகள் வழங்கினார்கள். தொடர்ந்து மாணவ, மாணவியர்களின் சுதந்திர தின விழா கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று முடிவில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

MOORTHY. Reporter