மஞ்சள் நிறத்தில் மாறும் அரசுப்பேருந்துகள்.. திராவிட மாடலின் அடுத்த புரட்சி.!!
தமிழ்நாடு போக்குவரத்து கழகம் மக்களுக்கு சிறப்பான சேவையை அளிக்கும் நோக்கத்தில் பேருந்துகளில் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது 1000 புதிய பேருந்துகளை வாங்க முடிவு செய்துள்ளது. அதற்கான டெண்டர் நிறுவனங்களுக்கு வழங்கபட்டுள்ளது. இதற்கிடையில் இருக்கைகள், ஜன்னல், கம்பிகள் ஆகியவை சேதமடைந்த பழைய பேருந்துகளை சரி செய்யும் பணிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் விரைவில் இயக்கத்துக்கு வர உள்ள, அரசு போக்குவரத்து கழக பேருந்துகளுக்கு மஞ்சள் நிற பெயின்ட் அடிக்கப்பட்டு வருகிறது.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நடைபெற்று வரும் நிலையில் அவருக்கு பிடித்தமான மஞ்சள் நிறத்தில் அரசு பஸ்கள், அடர் மற்றும் வெளிர் மஞ்சள், மெரூன் வண்ணங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மஞ்சள் நிறம் கருணாநிதிக்கு மட்டுமல்ல ஸ்டாலினுக்கும் பிடித்த நிறமாக மாறிவிட்டது. அதற்கு காரணம் ஆன்மீகம் அவர்களை ஆட்டிப்படைக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
வெளியில் சிறுபான்மையினரின் வாக்குகளை பெறுவதற்காக திராவிட வேடம் போட்டாலும் உள்ளுக்குள் இவர்கள் செய்யும் அயோக்கியத்தனம் அளவற்றது.....