செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நாட்டு வெடிகுண்டுகள் வீசி வாலிபர் வெட்டி படுகொலை

 *செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நாட்டு வெடிகுண்டுகள் வீசி வாலிபர் வெட்டி படுகொலை*

செங்கல்பட்டு நீதிமன்ற வளாகம் அருகே  நீதிமன்றத்தில் கொலை வழக்கு தொடர்பாக ஆஜராக வந்தவர்கள் மீது  நாட்டு வெடிகுண்டுகள் வீசி கொலை வெறி தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது 

இச்சம்பவத்தில் தாம்பரம் அருகே உள்ள இரும்புலியூரைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் நாட்டு வெடிகுண்டுகள் வீசி அறிவாளால் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.                                        

இச்சம்பவம் குறித்து செங்கல்பட்டு நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக  சேர்ந்த 5 பேர் கொண்ட ரவுடி கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இச்சம்பவத்தால் செங்கல்பட்டு நீதிமன்றம் மட்டுமின்றி நகரில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

G. Murugan. Reporter