வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் பில்லனகுப்பம் ஊராட்சியில் ரூ 17.15 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை புனரமைக்கும் பணி
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் பில்லனகுப்பம் ஊராட்சியில் சமத்துவபுரம் புனரமைத்தல் மற்றும் பழுதுபார்த்தல் திட்டத்தின் கீழ் ரூ 17.15 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை புனரமைக்கும் பணி மற்றும் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ 85.90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குந்தாரப்பள்ளி வேப்பனப்பள்ளி சாலை முதல் மாதினாவூர் தார் சாலை மேம்பாடு செய்தல் ஆகிய பணிகளுக்கு பூமி பூஜை செய்து துவக்கி வைக்கப்பட்டது. இதில் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் அர சாரங்கபாணி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் திருமதி சரயு, பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே மதியழகன் ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய் பிரகாஷ் ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ் ஏ சத்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.
E. V. Palaniyappan