அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் கைது ...!!

 அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து  மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் கைது ...!!

பாலக்கோடு பஸ் நிலையம் முன்பு அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து  மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் கைது 

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பஸ் நிலையம் முன்பு அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து  மறியலில் ஆர்ப்பாட்டம் பாமக மாவட்ட அமைப்பு தலைவர் கிருஷ்ணன் தலைமையில் இன்று  நடைப்பெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்க்கு நகர தலைவர் ராஜசேகர் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில்  என்.எல்.சி நிறுவனத்துக்கு எதிராக ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்திய  பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாசை கைது செய்ததை கண்டித்தும்,  உடனடியாக விடுவிக்க கோரியும், தமிழக அரசை கண்டித்து கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலளார்கள் துரை, சின்னசாமி, மாவட்ட பொருளாளர் சரவணகுமாரி, மாவட்ட தலைவி பெரியம்மா நாயுடு, உழவர் பேரியக்க மாவட்ட செயலாளர் முருகேசன், மாவட்ட செயற்குழு உறுப்பிணர் ராஜவேல், ஒன்றிய தலைவர் ஏழுகுண்டு, மாதையன், ஊராட்சி மன்ற தலைவர்கள் பிரகாஷ் சுப்ரமணி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம் செய்தவர்களை பாலக்கோடு போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

ஆர். பிரபாகர் பாலக்கோடு தர்மபுரி மாவட்டம் 28.7.2023