உலக சுற்றுச்சூழல் தின பேரணி மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

 உலக சுற்றுச்சூழல் தின பேரணி மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார் 

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி கிருஷ்ணகிரி  மாவட்ட ஆட்சியர் திருமதி கே.எம். சரயு அவர்கள் உலக சுற்றுச்சூழல் தின பேரணியை கொடி அசைத்து  துவக்கி வைத்து மரக்கன்றுகள் நட்டு வைத்தார்.அப்போது  மாணவர்களிடையே பேசிய மாவட்ட ஆட்சியர். வருங்காலத்தை ஆளப்போகும் மாணவர்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும், பிளாஸ்டிக்கை பயன்படுத்தக் கூடாது, மற்றும் உங்களின் சிறப்பு நாட்களில் ஒவ்வொருவரும் ஒரு மரக்கன்றுகளை நட்டு வைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார் இதனைத் தொடர்ந்து சுற்றுச்சூழல் உறுதிமொழி எடுக்கப்பட்டது நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி மகேஸ்வரி வட்டாட்சியர் சம்பத் பள்ளி தலைமை ஆசிரியர் வளர்மதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.