புதுப்பிக்கப்படாமல் உள்ள 10,000 க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு, மேலும் 3 ஆண்டுகளுக்கு புதுப்பித்தல் ஆணை....!?
பொருள் : பள்ளிக் கட்டிடங்களுக்கு DTCP அங்கீகாரம் இல்லாத காரணத்தால், புதுப்பிக்கப்படாமல் உள்ள 10,000 க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு, மேலும் 3 ஆண்டுகளுக்கு புதுப்பித்தல் ஆணை வழங்க தேவையான நடவடிக்கைகள்:
பள்ளிக் கட்டிடங்களுக்கு DTCP அங்கீகாரம் பெற வேண்டும் என்று முதன்முதலில் பள்ளிக் கல்வித்துறை ஜூன் 2018 ஆம் ஆண்டுதான் அறிவித்தது.
அப்படியிருக்கும் போது, 2018 க்கு முன்னரே துவக்க அங்கீகாரம் பெற்று இயங்கி வரும் பள்ளி கட்டிடங்களுக்கும் DTCP அங்கீகாரம் பெற வேண்டும் என்பது எப்படி நியாயமாக இருக்க முடியும்?.
எனினும் அரசு கேட்டுக் கொண்டதால் ...
1). DTCP G.O. No.76 ன் படி இதுவரை 01.01.2011 க்கு முன்னர் கட்டப்பட்ட Non Planning Area வில் உள்ள சுமார் 2000 பள்ளி கட்டிடங்களுக்கு DTCP அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.
2). 01.01.2011 க்குப் பின்னர் கட்டப்பட்ட Non Planning Area பள்ளி கட்டிடங்களுக்கு DTCP அங்கீகாரம் பெற ஏற்கனவே இருந்த நடைமுறைகளின் மீது நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளது. இவ்வகை கட்டிடங்களுக்கு DTCP அங்கீகாரம் பெற DTCP துறை புதிதாக இதுவரை எவ்வித விதிமுறைகளையும் வெளியிடவில்லை.
ஆகவே, DTCP Approval பெற விண்ணப்பிக்கவே இயலவில்லை.
3). அதேபோல் Planning Area வில் உள்ள அனைத்து பள்ளிக் கட்டிடங்களுக்கும் DTCP அங்கீகாரம் பெற தற்போதைய நிலையில், DTCP துறையால் எவ்வித விதிமுறையும் நடைமுறையில் இல்லை.
மேலே குறிப்பிட்ட 2 & 3 வகை பள்ளி கட்டிடங்களுக்கு DTCP அங்கீகாரம் பெற புதிய நடைமுறையை வெளியிடக் கோரி DTCP துறைக்கு அனைத்து சங்கங்கள் சார்பில் பலமுறை கோரிக்கை வைத்துள்ளோம்.
இது சம்மந்தமான பல வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளதால், அனைத்து கோணங்களிலும் பரிசீலித்து புதிய விதிமுறைகளை வெளியிடுவதாக கூறி வருகின்றனர். அதற்கு கால தாமதம் ஆகும் எனவும் கூறுகின்றனர்.
DTCP அங்கீகாரம் அவசியம் என பள்ளிக்கல்வித் துறை ஜூன் 2018 ல் தான் அறிவித்தது.
தற்போதைய நிலையில் வரும் May'2023 தேதியோடு பல பள்ளிகளுக்கு புதுப்பித்தல் முடிவடைந்துள்ளது.
May'2023 க்கு பின்னர் புதுப்பித்தல் பெறுவதற்கான முறையான வழிகாட்டுதல்கள் இதுவரை இல்லை.
அதேபோல், கடந்த 3 , 4 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட புதிய பள்ளிகளும் துவக்க அங்கீகாரம் பெற இயலாத நிலையில் உள்ளனர். கொரானாவிற்கு முன்னரே விண்ணப்பித்த பள்ளிகளும் இதுவரை அங்கீகாரம் பெற இயலாமல் உள்ளது. அவ்வகை பள்ளிகளின் EMIS Portal லும் முடக்கப்பட்டதால் Online TC கொடுக்க இயலாமலும், EMIS ல் Students Data - Entry, Edition & Updation செய்ய இயலாமலும் உள்ளனர்.
பள்ளிகளை தொடர்ந்து நடத்த புதுப்பித்தல் ஆணை நடைமுறையில் இருப்பது RTE சட்டப்படி கட்டாயம். மேலும் பள்ளி பேருந்துகளுக்கு FC, Permit போன்ற பல விசயங்களுக்கு Renewal அவசியம்.
ஆகவே, June 2018 வரை உள்ள அனைத்து பள்ளிகளுக்கும், DTCP அங்கீகாரம் பெற மேலும் 3 ஆண்டுகள் அல்லது 2 ஆண்டுகளாவது கால அவகாசம் கொடுத்து, 2018 க்கு முன் கட்டிடம் கட்டப்பட்டு இயங்கி வரும் அனைத்து பகுதிகளில் உள்ள DTCP அங்கீகாரம் பெற இயலாமல் உள்ள சுமார் 10,000 பள்ளிகளுக்கும், புதிய பள்ளிகளுக்கும் நிபந்தனையின் அடிப்படையில் மேலும் 3 வருடங்களுக்கு அதாவது May'2026 வரை புதுப்பித்தல் ஆணை வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்சி பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கே. ஆர். நந்தகுமார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், பள்ளிக்கல்வி செயலாளர், பள்ளிக்கல்வி இயக்குனர் ஆகியோருக்கு அனுப்பி இல்ல கோரிக்கை மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.