தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்? - தங்கம் தென்னரசு புதிய நிதி அமைச்சர்...!

 தமிழக அமைச்சரவையில்  அதிரடி மாற்றம்? -  தங்கம் தென்னரசு புதிய நிதி அமைச்சர்...!

தமிழக அமைச்சரவையிலிருந்து ஆவடி நாசர் விடுவிக்கப் பட்ட நிலையில், அவருக்கு பதிலாக முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி. ராஜா புதிய அமைச்சராக அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறார்.

ஆடியோ விவகாரம், மூத்த அமைச்சர்கள் சர்ச்சை பேச்சு விவகாரத்திற்கு இடையே அமைச்சரவையில் மாற்றம் இருக்கலாம் என பேசப்பட்டது. அதனை உறுதி செய்யும் வகையில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை மாற்றம் செய்யப்படுவது இது 3-வது முறையாகும்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன், சிவசங்கர் இலாகாக்கள் மாற்றப்பட்டது.

டிசம்பரில் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி பொறுப்பு ஏற்றதும் 10 அமைச்சர்களின் இலாகாக் கள் மாற்றப்பட்டது. அப்போது தமிழக அமைச்சரவை உச்சப்பட்ச வரம்பான 35 என்ற எண்ணிக்கையை எட்டியது.

இதனையடுத்து ஒரு அமைச்சரை நீக்கினால்தான் மற்றொரு வரை இணைக்கலாம் என்றானது. இந்த நிலையில்தான் ஆவடி நாசர் நீக்கப்பட்டு டி.ஆர்.பி. ராஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து யார்... யாருக்கு எந்த பொறுப்பு என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

நிதித்துறை அமைச்சராக இருக்கும் பழனிவேவ் தியாகராஜன் இலாக மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக பதவி ஏற்றுள்ளார்.

இப்போது தொழில்துறை அமைச்சராக உள்ள தங்கம் தென்னரசுக்கு கனிம வளத்துடன் கூடிய நிதித்துறை வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நாம் மக்களாட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொன்ன அடிப்படையில் இந்த மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.