உளுந்தூர்பேட்டை நகராட்சியில் புதிய பேருந்து நிலையம்
உளுந்தூர்பேட்டை நகராட்சியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என சட்டமன்றத்தில் தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு மு. க .ஸ்டாலின் அவர்கள் மூலம் அறிவிக்கப்பட்டது. அடுத்து இன்று சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை புறவழிச் சாலையில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான இடத்தினை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் திரு. ஸ்ரவன்குமார், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு. மணிக்கண்ணன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர் . அப்போது வட்டாட்சியர் ராஜு ,நகர மன்ற தலைவர் திரு. திருநாவுக்கரசு, துணைத் தலைவர் திரு.வைத்தியநாதன், திமுக நகர செயலாளர் திரு. டேனியல்ராஜ் உள்ளிட்ட நகர மன்ற உறுப்பினர்கள் இருந்தனர்*
G. Murugan. Reporter