மிஸ் கூவாகம் அழகி போட்டி

மிஸ் கூவாகம் அழகி போட்டி

உளுந்தூர்பேட்டை அடுத்த உலக புகழ்பெற்ற கூவாகம் கோவில் சித்தரை திருவிழாவை முன்னிட்டு தென்னிந்திய திருநங்கைகள் சார்பாக திருநங்கைகளுக்கான மிஸ் கூவாகம் அழகி போட்டியானது இந்த ஆண்டு உளுந்தூர்பேட்டையில் நடைபெற்றது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷர்வான் குமார் , திமுக கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட செயலாளர், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினருமான உதயசூரியன் எம் எல் ஏ, உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிகண்ணன் எம் எல் ஏ, உளுந்தூர்பேட்டை நகர் மன்ற தலைவர் திருநாவுக்கரசு மற்றும் திருநங்கைகள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.