ஓசூரில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

 ஓசூரில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

*ஓசூரில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம். அதிமுகவில் இருந்த சென்ற செந்தில் பாலாஜியை வைத்து கள்ளச்சாராயம் காய்ச்சும் திமுக- தம்பிதுரை விமர்சனம்.*

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளருமான பி பாலகிருஷ்ணா ரெட்டி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் மாநிலங்களவை உறுப்பினருமான டாக்டர் மு தம்பிதுரை மற்றும் அதிமுக துணை பொதுச்செயலாளர் கே பி முனுசாமி ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்கள். 

மின்வாரிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சி பல உயிர்களை பலி வாங்கிய திமுக அரசை கண்டித்தும் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு அரசு அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுவதாகவும் கோரி முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதில் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் கலந்து கொண்டனர். 

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் மு தம்பிதுரை, தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக பாராளுமன்றத்தில் நிறுவப்பட்ட செங்கோல் பண்டித ஜவஹர்லால் நேருவால் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது. ஆனால் தற்பொழுதைய பிரதமரால் அது மக்கள் பிரதிநிதிகள் உள்ள நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதைவிட தமிழர்களுக்கு ஒரு பெருமை உண்டா என்றால் அது இல்லை என்றே சொல்லலாம். 

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற ஒருவர் அங்கு அமைச்சராக இருந்து கொண்டு தற்பொழுது கள்ளச்சாராயம் இதற்கு காரணமாக இருப்பதோடு பல உயிர்களையும் பலி வாங்கியுள்ள திமுக அரசை வன்மையாக கண்டிப்பதாக அவர் தெரிவித்தார் 

மேலும் தற்பொழுதைய திமுக அரசின் அவலங்கள் மற்றும் கரூரில் நடைபெறும் சோதனைகளின் பொழுது அரசு அதிகாரிகள் தாக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவித்த அவர் இது ஒன்றே திமுக அரசின் மக்கள் விரோத போக்கை காட்டுகிறது. விரைவில் மக்கள் திமுகவை தூக்கி எறிவார்கள் என அவர் தெரிவித்தார்.

Hosur Reporter. E. V. Palaniyappan 

Popular posts
தனியார் பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்கள் முன்னாள் மாணவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு....! தனியார் பள்ளிகள் சங்க மாநில செயலாளர் K.R.நந்தகுமார் அறிவிப்பு...
படம்
பத்திரிகையாளர்களுக்கு அரசு அடையாள அட்டை வழங்க தாமதம், விரைவாக வழங்க மனு அளித்த ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நல சங்கம் - தமிழ்நாடு, நிர்வாகிகள்.
படம்
நட்சத்திர தொகுதியாக மாறிவிட்ட தர்மபுரி....! அம்மாவுக்காக மகள்கள் செய்யும் பிரச்சாரம்....!!
படம்
குழந்தைக்கு ரோலக்ஸ் என்றா பெயர் வைப்பது....?” - அண்ணாமலை விமர்சனம்
படம்
தனியார் பள்ளிகள் இயக்குனருக்கு வரவேற்பு
படம்