அரசு கிளை அச்சகங்களிலும் பெயர் மாற்றம் செய்யலாம் – தமிழக அரசின் புதிய ஏற்பாடு!
!
அரசு கிளை அச்சகங்களிலும் பெயர் மாற்றம் செய்யலாம் – தமிழக அரசின் புதிய ஏற்பாடு!

சேலம், விருத்தாசலம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய அரசு கிளை அச்சகங்களிலும் பொதுமக்கள் இன்று முதல் தங்களுக்கான பெயர்களை மாற்றம் செய்து கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

பெயர் மாற்றம்:

தமிழகத்தில் உள்ள பொதுமக்கள் தங்களது பெயர்களை மாற்றம் செய்வதற்கு சென்னை, மதுரை, திருச்சி ஆகிய இடங்களுக்கு செல்ல வேண்டியதாக இருந்தது. இந்நிலையில், பொதுமக்கள் தங்களின் வசதிக்காக அரசு கிளை அமைச்சகங்களிலும் பெயர் மாற்றம் செய்வதற்கான வசதியினை ஏற்படுத்தித் தரும் படி கோரிக்கை வைத்திருந்தனர். மக்களின் கோரிக்கையின் படி அதற்கான நடவடிக்கை தமிழக அரசின் சார்பில் எடுக்கப்பட்டு அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. அதாவது, சேலம், விருத்தாச்சலம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய அரசு கிளை அச்சகங்களிலும் பொதுமக்கள் தங்களது பெயர்களை மாற்றம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

மேலும், பொது மக்களுக்கு பெயர் மாற்றம் செய்வதற்கான வசதிகள் மற்றும் அனைத்து விண்ணப்பிக்கும் வசதிகளும் சேலம், விருத்தாசலம் மற்றும் புதுக்கோட்டை அரசு கிளை அச்சகங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், பொதுமக்கள் பெயர் மாற்றம் செய்வதற்கான சான்றிதழை பெறுவதற்கு இ -சலான் மூலமாக கட்டணத்தை செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் எனவும், திருநங்கைகளுக்கு எவ்வித கட்டணமும் தேவையில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு கிளை அச்சகங்களில் பெயர் மாற்றம் செய்வதற்கான இந்த திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.