ராமநாதபுரத்தில் சிலம்பம் நடுவர் பயிற்சி முகாம்!!!

 ராமநாதபுரத்தில் சிலம்பம் நடுவர் பயிற்சி முகாம்!!!

ராமநாதபுரம் விக்டரி அகாடமியில்  நேரு யுவகேந்திரா இளைஞர் நலன் விளையாட்டு அமைச்சகம் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட சிலம்ப ஆசிரியர்கள் நலச்சங்கம் சார்பாக மாவட்டத்தில் வளரும் சிலம்பம் ஆசிரியர்களுக்கு சிலம்பம் நடுவர் பயிற்சி கொடுக்கப்பட்டது இம்முகாமில் சுமார் 50 மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர் இவர்களுக்கு நெடுகம்பு , நடுங்கம்பு , கம்பு சண்டை , வேல்கம்பு , மான் கொம்பு போன்ற பாடங்களில் மதிப்பெண் எவ்வாறு வழங்க வேண்டும் என்பதினை மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது

கிஸ்வா சிலம்பம் பயிற்சி பள்ளி மாஸ்டர் அகமது மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்தார் ராமநாதபுரம் மாவட்ட சிலம்பம் ஆசிரியர்கள் நலச்சங்கம் தலைவர் வரதராஜன் ,துணை தலைவர் சண்முக வேல், செயளாலர் மேத்யு இம்மானுவேல், துணை செயலாளர் ஹேமநாதன் , பொருளாளர் வருசைகனி, கெளரவ தலைவர் செல்வ பாண்டி , ஒருங்கிணைப்பாளர்களர்கள் அகமது, விக்னேஷ் மற்றும் சங்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் முகாமின் இறுதியில் மாணவர்களுக்கு பயிற்சி சான்றிதழ் வழங்கப்பட்டது. 

  ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N.அன்வர் அலி