அமைச்சர் துரைமுருகன் பேசிய பேச்சு... கொந்தளிக்கும் பெண்கள்...!

 அமைச்சர் துரைமுருகன் பேசிய பேச்சு... கொந்தளிக்கும் பெண்கள்...!

வேலூர் மாவட்டத்தில் நடந்த விழா ஒன்றில் அமைச்சர் துரைமுருகன் பேசிய வீடியோ என்று கூறப்படுகிறது. அந்த குறிப்பிட்ட வீடியோவில் அமைச்சர் துரைமுருகன் பேசிய சில விஷயங்கள் சர்ச்சையாகி உள்ளது.

அமைச்சர் துரைமுருகன் கூறுகையில், "செப்டம்பர் 15ம் தேதி முதல் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் மாதம் மாதம் கொடுக்க போகிறோம். நீங்களே செலவுக்கு வாங்கிக்கொள்ளலாம். அவர் (கணவன்) சம்பாதிப்பதை அங்கேயே உட்கார்ந்து சாப்பிட்டு வந்திடலாம். ஆகையினால் குடும்பத்தை காப்பாற்றுவதற்கு இந்த தொகை உதவும்.

உங்கள் பெண் கல்லூரியில் படிக்கிறார் என்றால், வேலூர் கல்லூரியில் சேர்ந்திருக்கிறார் என்றால், அவங்களுக்கும் ஒரு ஆயிரம் ரூபாய் கையில் கொடுக்கிறோம். உங்க அம்மாவிடம் போய் பஸ்சுக்கு கேட்காதே.. நீ பசங்களோட சினிமாவுக்கு போனீன்னா அங்க பணம் கேட்காதே.. ஒரு செல்போன் வாங்கி வைத்துக்கொள்..

நைசாக பேசு, என்ன வேணும்னாலும் பண்ணு, அதுக்கும் ஒரு ஆயிரம் கொடுக்கிறோம்" இவ்வாறு துரைமுருகன் பேசும் வீடியோவை பாஜகவைச் சேர்ந்த எஸ்.ஆர். சேகர் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்து பலரும் அமைச்சர் துரைமுருகனுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.

திமுக அமைச்சர்களே இப்படித்தான் என்று திராவிட மாடல் ஆட்சியின் அலங்கோலத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.