தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதி: அமைச்சர் அன்பில் மகேஸ்!

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதி: அமைச்சர் அன்பில் மகேஸ்!

தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டுக்கான பள்ளிகள் திறக்கும் தேதியைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில், 

1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் 5-ம் தேதியும், 6 - 9-ம் வகுப்புகளுக்கு  ஜூன் 1-ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும்.

10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் 18-ம் தேதி பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஏப்ரல் 8-ம் தேதி 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடைபெறும். மார்ச் 19-ம் தேதி பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும். 

மேலும், விடுமுறை நாள்களில் சிறுவர்கள் நீர்நிலைகளுக்குச் செல்ல வேண்டாம். பெற்றோர்கள் அருகில் உள்ள நூலகத்திற்கு அழைத்துச் செல்லாம். 

வெயில் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பது தள்ளிப்போகுமா? என்ற கேள்விக்கு?

வெயில் அதிகம் இருந்தால் ஜூனில் தாமதமாக பள்ளிகளை திறப்பது பற்றி முதல்வருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். 

சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக்குப் பிறகு அமைச்சர் அன்பின் மகேஸ் தகவல் தெரிவித்துள்ளார். 

Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் நீக்கம்.
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்