ராமநாதபுரம் கிறிஸ்தவ மாவட்ட ஆயர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்!!!

 ராமநாதபுரம் கிறிஸ்தவ மாவட்ட ஆயர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்!!!

ராமநாதபுரம் மாவட்ட கிறிஸ்தவ சர்ச் ஆயர்கள் மாவட்ட ஆட்சியரிடம் ராமநாதபுரம் வட்டம் பெருங்குளம் குரூப்பைச் சேர்ந்த காரான் கிராமம்          சிஎஸ்ஐ நிர்வாகத்திற்கு சொந்தமான புல எண்.153/2தனி நபர்கள் சிலரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.இதை அகற்றித் தருமாறு இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஷேக் மன்சூர் இடம் வழங்கப்பட்டது.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது :-  ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் ராமநாதபுரம் வட்டம் பெருங்குளம் குரூப் புல எண் 153/2 விஸ்தீரணம் 85செண்டு நிலம் CSI சர்ச்சுக்கு பாத்தியமானது என்றும் மேற்படி நிலம் 1701ஆம் ஆண்டு எழுதப்பட்ட ஆவணத்தை ஆவண எண் 1390/1961 ரிஜிஸ்டர் பத்திரமாக தங்கள் மிசன் TRUST PROPERTY -யாக பதிவு செய்த ஆவணத்தில் அடிப்படையிலும் 1953ஆம் ஆண்டு வருவாய் துறை ஆவணமான SLR மூலமாகவும் 1958ஆண்டு தமிழக அரசின் செட்டில்மெண்ட் ஆவணப்படியும் எங்களுக்கு பாத்தியமானதும் நாளைய தேதி வரை தங்கள் கைவசம் அனுபவத்தில் கல்லறை தோட்டமாக பயன்படுத்தி வருகின்றோம். மேற்படி இடத்தில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பொது நிதியிலிருந்து கலையரங்கம் கட்டுவதற்காக திட்ட மதிப்பீடு மற்றும் அதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது அதன் தொடர்ச்சியாக கடந்த 11.3.2023 அன்று சட்டமன்ற உறுப்பினர் அவர்களிடம் கலையரங்க கட்டுவதற்கு வேறு இடத்தை தெரிவு செய்ய வேண்டி அவரிடம் முறையிட்டோம் அவரும் வேறு இடத்தை தெரிவு செய்ய வேண்டி அதற்கு சம்மதித்து நிறுத்தப்பட்டுள்ளது. எனவே சிஎஸ்ஐ நிர்வாகத்திற்கு சொந்தமான மேற்படி இடத்தில் ஆக்கிரமிப்பு செய்துள்ள சபரி சாஸ்தா அறக்கட்டளையால் ஆக்கிரமிப்பு செய்துள்ள, சபரி சாஸ்தா அறக்கட்டளையால் நடத்தப்படும் ஐயப்பன் ஆலயம் மற்றும் நூலகம், பொதுமக்கள் பயன்பாடுயின்றி கிடக்கும் 32 ஆண்டு பழமையான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, மற்றும் எங்கள் சிஎஸ்ஐ நிர்வாக சொத்து பரிபாலனத்திற்கு அப்பாற்பட்டு கட்டப்பட்டுள்ள அனைத்து கட்டிடங்களை அகற்றிட உத்தரவிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்,என ராமநாதபுரம் மாவட்ட சிஎஸ்ஐ சர்ச்பாதிரியார்கள் கையெழுத்திட்டு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)அவர்களிடம் மனு அளித்தனர். ட.C. சேர்மென் அருள்திரு ஞான ஆனந்தராஜ், அருள்திரு பிரேம் கிருஷ்து தாஸ்,மற்றும் C.S.I.சர்ச் பொருளாளர் ரூபன் உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆயர்கள் மனு அளித்தனர்.       

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N.அன்வர் அலி