மின்மாற்றி அமைத்து தந்த தளி சட்டமன்ற உறுப்பினர் T.இராமச்சந்திரன்
தளி சட்டமன்றத் தொகுதி, பெட்டமுகிலாளம் ஊராட்சியில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள தொளுவபெட்டா கிராமத்தில் குறைந்த மின்னழுத்த காரணமாக மின் விளக்குகள் சரியாக எரிவதில்லை என சட்டமன்ற உறுப்பினர் அவர்களிடம் முறையிட்டனர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட மின்துறை அதிகாரிகளின் உதவியுடன் இன்று புதிய மின்மாற்றி அமைத்து தளி சட்டமன்ற உறுப்பினர் T.இராமச்சந்திரன் B.Sc.,LLB.,MLA அவர்கள் துவக்கி வைத்தார் உடன் மேற்பார்வை பொறியாளர் கிருஷ்ணகிரி, மின் உதவி செயற்பொறியாளர் தேன்கனிக்கோட்டை, உதவி பொறியாளர்கள், ஒன்றிய கவுன்சிலர் சுஜாதா மாரப்பன், ஊராட்சி மன்ற தலைவர், துணை தலைவர், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.