அப்படியே ஓட்டு போட்டு கிழிச்சிட்டீங்க...!அமைச்சர் பொன்முடி திமிர் பேச்சு...!!

 அப்படியே ஓட்டு போட்டு கிழிச்சிட்டீங்க...!அமைச்சர் பொன்முடி திமிர் பேச்சு...!!

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அருங்குறிக்கை கிராமத்தில் கட்டப்பட்டுள்ள அரசு பள்ளி கட்டிட திறப்பு விழா திங்கள்கிழமை (மார்ச் 06) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தி.மு.க அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்துப் பேசினார்.

இந்த நிகழ்சியில் அமைச்சர் பொன்முடி, 'உங்கள் கிராமத்தில் ரோடு வசதி, தெரு மின்விளக்கு வசதி, குடிநீர் வசதிகளை நான் தான் செய்து கொடுத்தேன்' என்று பேசினார். அப்போது கூட்டத்தில் அமர்ந்திருந்த பெண்கள் சிலர் எழுந்து குடிநீரே வருவதில்லை எனக் கூறி கூச்சல் எழுப்பினர். இதனால், ஆத்திரமடைந்த அமைச்சர் பொன்முடி, இந்த அருங்குறிக்கை கிராமத்தில் அப்படியே எனக்கு ஒட்டு போட்டு கிழி, கிழின்னு கிழிச்சிட்டீங்க.. கேட்க வந்துட்டீங்க.. உட்காருங்கள். நான் எப்போ வந்தாலும் இந்த அருங்குறிக்கையில் இப்படி தான் கத்துவீங்கன்னு எனக்கு தெரியும்' என்று கோபமாகப் பேசினார்.
ஆனாலும், ஓட்டு போட்டவர்கள், போடாதவர்கள் என அனைவருக்கும் நல்ல திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் கூறியது போல செய்து கொண்டிருக்கிறோம் என்று கூறினார்.

குடிநீர் பிரச்னை குறித்து கிராம மக்கள் எழுப்பிய கேள்விக்கு நீங்கள் எனக்கு அப்படியே ஓட்டு போட்டு கிழிச்சிட்டீங்க என்று பேசியது எதிர்க்கட்சிகளிடையே விமர்சனத்தைப் பெற்றுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு, அமைச்சர் பொன்முடி, தமிழக அரசின் பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணத் திட்டம் குறித்து பேசுகையில், இப்போது பெண்கள் எல்லாம் ஓசியில் போகிறார்கள் என்று பேசியது சர்ச்சையானது.

திமுக அமைச்சர்களே பொறுத்தவரை ஓட்டு கேட்டு வரும் போது ஒரு மாதிரி நடந்து கொள்வதும். மக்கள் அனைவரும் ஓட்டு போட்டு முடித்தவுடன் ஒரு மாதிரி நடந்து கொள்வதும் வாடிக்கையாக்கி போனது.

 நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் ஓட்டு கேட்டு தெருவுக்கு வந்த மந்திரிகள் முதல் மாவட்ட செயலாளர்கள் வரை எல்லோருமே கக்கூஸ் கழுவுவது முதல் ஜெட்டி பனியன் துவைக்கிறது வரை எல்லா வேலைகளையும் செய்து கொடுத்தார்கள். இப்போது இவர்களை தேடி மக்கள் சென்றால் இப்படித்தான் பேசுவார்கள். இது வந்து அவர்களுக்கு கைவந்த கலை.

திராவிட மாடலின் முக்கிய கோட்பாடு இதுதான். எனவே அவர்களை எல்லாம் மாற்ற முடியாது என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.