கலைவாணி மெட்ரிக்கபள்ளி ஆண்டு விழா!!!

 கலைவாணி மெட்ரிக்கபள்ளி ஆண்டு விழா!!!

ராமநாதபுரம் மாவட்டம்,ராமநாதபுரம் பாரதி நகரில் உள்ள கலைவாணி மெட்ரிக் பள்ளியில் ஆண்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு நிறுவனர் செயலாளர் பொறியாளர் ஜெகதீஸ்வரன் தலைமை ஏற்றார்.தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியை ஜி. சாந்தினி முன்னிலை வகித்தார்.இந்நிகழ்வில் தமிழ் துறை பேராசிரியர் எம் அப்துல் கலாம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கலைவாணி மெட்ரிக் பள்ளியின் நிர்வாக திறமையை வெகுவாகப் பாராட்டினார்.

பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளை பார்த்து பாராட்டினார்.மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆய்வாளர் (ஓய்வு)  ஜேக்கப், டேர் பவுண்டேஷன் மேனேஜிங் டிரஸ்டி தரணி முருகேசன்,துணை தாசில்தார் உதயகுமார் உள்ளிட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் பள்ளி ஆசிரியைகள்,பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் பார்த்தோர் கண்களை கவர்ந்தன.குழந்தைகளின் யோகா நடனம் மிக நன்றாக இருந்தது என அனைவரும் பாராட்டினர். 

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N. அன்வர் அலி