எஸ்டிபிஐ கட்சி தொகுதி பொதுக்குழுகூட்டம் !!!

 எஸ்டிபிஐ கட்சி தொகுதி பொதுக்குழுகூட்டம் !!!

எஸ்டிபிஐ கட்சி தொகுதி பொதுக்குழு கூட்டம் திருப்புல்லாணியில் நடைபெற்றது.

 மாநில நிர்வாகி பங்கேற்பு.

சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா எஸ்டி பிஐ கட்சி ராமநாதபுரம் மேற்கு தொகுதி பொதுக்குழு கூட்டம் தலைவர் அப்துல் வஹாப் தலைமையில் இன்று 19/3/2023 நடைபெற்றது, இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில செயற்குழு உறுப்பினர் ஜஹாங்கீர் அரூஷி மற்றும் மாவட்ட தலைவர் ரியாஸ் கான் அவர்கள் தொண்டர்களிடையே கலந்துரையாடினார்கள்.

முன்னதாக தொகுதி தலைவர் அப்துல் வஹாப் அனைவரையும் வரவேற்றார் மாவட்ட துணைத் தலைவர் சோமு மற்றும் தொகுதி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் திருப்புல்லாணி பொக்கனாரேந்தல் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் அவர்களுக்கு எஸ்டிபிஐ கட்சியின் உறுப்பினர் சேர்வதற்கான படிவத்தை மாவட்ட துணை தலைவர் சோமு அவர்கள் வழங்கினார்கள் அதனை தொடர்ந்து அனைத்து நகர நிர்வாகிகளுக்கும் வழங்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்ச்சியில் தொகுதி சம்பந்தமான நீண்ட விவாதங்கள் நடைபெற்றது, வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலையொட்டி தொகுதிக்குட்பட்ட அனைத்து இடங்களிலும் பூத் கமிட்டிகள் அமைப்பது போன்ற தேர்தல் வேலைகளை முன்னெடுப்பு போன்ற பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிகழ்ச்சியில் கீழக்கரை, திருப்புல்லாணி, பெரியபட்டினம் நகர் நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N. அன்வர் அலி