வடமாநில தொழிலாளர்கள் மீதான தாக்குதல்....! தமிழகத்தில் நடப்பது என்ன...?

 வடமாநில தொழிலாளர்கள் மீதான தாக்குதல்....! தமிழகத்தில் நடப்பது என்ன...?  

வெ ளியேறுகிறார்களா வடமாநில தொழிலாளர்கள்?

தமிழ்நாட்டில் சென்னை முதல் கன்னியாகுமரி முதல் வடமாநில தொழிலாளர்கள் பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மெட்ரோ பணிகள், கட்டட பணிகள், பானிபூரி, பஞ்சுமிட்டாய் விற்பனை, ஓட்டல் பணி, பெயிண்டிங் பணி , பண்ணை வேலைகள் என ஏராளமான பிரிவுகளில் அவர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் தான் தமிழ்நாட்டில் வடமாநிலத்தில் இருந்து புலம்பெயர்ந்து பணியாற்றும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சமீபத்தில் பல வீடியோக்கள் பரவின. மேலும் வடமாநில தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக ரயில் நிலையங்களில் இறங்கி செல்லும் வீடியோக்களும் வெளியாகின. இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழ்நாட்டில் தமிழர்களின் வேலைவாய்ப்புகள் வடமாநிலத்தவர்களால் பறிக்கப்படுகிறது என குற்றம்சாட்டினர். மேலும் தமிழ்நாட்டில் வேலை செய்யும் மக்களை கண்காணிக்க வேண்டும். அவர்களுக்கு ஓட்டுரிமை வழங்க கூடாது என பல கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர்.

இது ஒருபுறம் இருக்க சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வடமாநில தொழிலாளர்களை தமிழர்கள் அடித்து துன்புறுத்துவதாக வீடியோக்கள்  வலைதளங்களில் பரவின. 

குறிப்பாக பீகார் தொழிலாளர்களை தமிழர்கள் அடித்து விரட்டுவதாக வதந்தி பரவியது. மேலும் ஹோலி பண்டிகை கொண்டாட சொந்தஊர் செல்ல ரயில் நிலையத்துக்கு தொழிலாளர்கள் வந்த நிலையில் அவர்கள் தாக்குதலுக்கு பயந்து வெளியேறுவதாக  தகவல்கள் பரப்பப்பட்டன. 

இது பீகார் சட்டசபையில் பிரச்சனையை ஏற்படுத்தியது. இதையடுத்து பீகார் மாநில அதிகாரிகள் குழுவினர் தமிழ்நாடு வந்து திருப்பூர், சென்னையில் புலம்பெயர் தொழிலாளர்களை சந்தித்து விசாரித்தனர். அப்போது தமிழ்நாட்டில் நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் என அவர்கள் அதிகாரிகள் குழுவினரிடம் தெரிவித்தனர்.

முதலில் இந்தி வேண்டாம், இந்திக்காரன் வேண்டாம் என்று பிரச்சனையை பெரிதாக கிளப்பி விட்டவர்களே திராவிட முன்னேற்றக் கழகத்தை சார்ந்தவர்கள் தான். 

இந்தி தெரியாது போடா என முதல்வர் மகன் டி ஷர்ட் கலாசாரத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தொடங்கி வைத்தார்.

 விமான நிலையத்தில் என்னிடம் இந்தியில் பேசினார்கள் என முதல்வரின் தங்கை திமுகவின் மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. ஒரு பொய்யான புகாரை வழங்கி வட மாநிலத்தவருக்கு எதிரான வன்மத்தை தொடங்கி வைத்தார்.

முதல்வரின் குடும்பத்தினரால் தொடங்கி வைக்கப்பட்ட காழ்ப்ப்ணர்ச்சி, வன்மம் தற்போது வட மாநிலத்தவர் மீது திரும்பி உள்ளது.  திருப்பூரில் நடந்த சம்பவத்தை எப்படி  பொய் போலி என்று சொல்ல முடியும்...?  அப்போதெல்லாம் இதைப்பற்றி வாய் திறந்து பேசாத ஆட்சியாளர்கள்

அப்போதெல்லாம் அமைதிப்படையாக அமைதி காத்து வந்த திமுகவின் தலைவர் மு க ஸ்டாலின் இப்போது அதிரடி படையாக மாறி ஆக்சன் எடுப்பதற்கு காரணம் அரசியல் தான்.

முதல்வரின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில், ஒரு சில வட இந்திய தலைவர்கள் கலந்து கொண்ட உடன், இந்திய தேசத்திற்கு தலைமை தாங்க மு. க. ஸ்டாலின் கண்ட பகல் கனவு வீணாகிவிடும் என்கிற அச்சம் தான்  இப்போது அவர் அரங்கேற்றிக் கொண்டிருக்கும் நாடகத்திற்கு காரணம்.

இந்நிலையில் தான் புலம்பெயர்ந்த வடமாநில தொழிலாளர்கள் பிரச்சனைகள் பற்றி அரசியல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் கருத்து தெரிவித்துள்ளார். 

பீகாரை சேர்ந்த அரசியல் வியூக வகுப்பாளரான இவர் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு ஆலோசகராக செயல்பட்டார். இந்நிலையில் தான் பிரசாந்த் கிஷோரின் கருத்து விவாதத்தை கிளப்பி உள்ளது. 

இதுபற்றி அவர், ‛‛தொழிலாளர்கள் மீதான தாக்குதல் என்பது போலி வீடியோக்கள் என துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார். இதில் விரைவில் உண்மையான வீடியோவை வெளியிடுவேன். இந்த விஷயத்தில் சில பத்திரிகையாளர்கள் தவறான வீடியோக்களை பகிர்ந்ததை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் உண்மையில் நடக்கின்றன என்பதை நாம் மறந்துவிடக்கூடாது'' என்று பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.

இந்த விஷயத்தில் பிரசாந்த் கிஷோர் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவை கவிழ்க்க பார்க்கிறாரா...? அல்லது முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை கவிழ்க்க நினைக்கிறாரா....? என்பது போகப் போகத்தான் தெரியும்.

தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்களின் அதிகரித்ததற்கு காரணமே தமிழ்நாட்டு இளைஞர்களை மது போதைக்கும் சினிமா நட்சத்திரங்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் அடிமையாக்கியதுதான். உழைக்கின்ற ஒரு சமுதாயத்தை உருவாக்குவதற்கு பதில் ஊதாரித்தனமான பொய், பித்தலாட்டம் செய்கின்றவனாக அவர்கள் உருவானதற்கு காரணம் போலி அரசியல்வாதிகள் இன்றைய ஆட்சியாளர்கள் தான். 

வேலையே செய்யாமல் ஊதியம் மட்டும் பெற வேண்டும் என்கிற மனநிலைக்கு அவர்களை தள்ளியவர்களே இவர்கள் தான். 

 இவர்களை நம்பினால் ஒரு வேலையும் நடக்காது தமிழகத்தின் தொழில் ஸ்தம்பித்துவிடும் என்கிற எண்ணத்தில் குறைந்த ஊதியத்தில் கடினமாக உழைக்கக்கூடிய வட மாநில இளைஞர்கள் அழைத்து தமிழக தொழிலதிபர்கள்  வேலைவாய்ப்பு வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். 

இதற்கு தமிழக அரசு அவர்களுக்கு எந்தவித உதவியும் செய்வதில்லை. ஆனால் தனது கட்சிக்காரர்களை வைத்துக்கொண்டு அவர்களுக்கு எதிரான ஒரு பிரச்சாரத்தை சமீப காலமாக நடத்திக் கொண்டு வந்தது அனைவருக்கும் கண்கூடாக தெரிந்த விஷயம். இதை தமிழ்நாட்டு மக்கள் தெளிவாகத்தான் உணர்ந்திருக்கிறார்கள். வடநாட்டுக்காரனுக்கும் இது நன்றாக தெரியும்.

இதை வைத்து எனது ஆட்சியை கலைக்க பார்க்கிறார்கள் என்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஊளையிடுவதெல்லாம் பிரச்சினையை திசை திருப்புவதற்கான வழியே தவிர தமிழகத்தை அமைதி பூங்காவாக மாற்றுவதற்காக அல்ல.

 ஆட்சியாளர்கள் இனியாவது சிந்தித்து நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய பாடுபட வேண்டும்.