நமது கோரிக்கைகளை வென்றெடுக்க வேலூர் நோக்கி ஓடி வாருங்கள்.....! பொதுச் செயலாளர் அரைகூவல்.... !!
என் உயிரினும் மேலான பள்ளி நிர்வாகிகள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் நான் தான் உங்கள் நந்தகுமார் பேசுகிறேன்.
வருகின்ற சனிக்கிழமை 25ஆம் தேதி காலை சரியாக 10.30 மணிக்கு வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு தனியார் பள்ளி நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து சங்க பேதம் மறந்து...
நமது பல்வேறு கோரிக்கைகளான....
RTE கல்வி கட்டண பாக்கியை உடனே வழங்க கோரி,
அனைத்து பள்ளி களுக்கும் உடனடி அங்கீகாரம் வழங்க கோரி,
தனியார் பள்ளிகளுக்கும் தனியார் பள்ளி சொத்துகளுக்கும், ஆசிரியர்களுக்குமான பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்த கோரி,
நர்சரி பிரைமரி பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக் கக் கோரி,
பள்ளி நிர்வாகிகளை மிரட்டி பல்லாயிரக்கணக்கில் லஞ்சம் வாங்கும் வேலூர் டிஇஓ தாம்சன் , சேலம் டிஇஓ உதயகுமார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி,
தனியார் பள்ளிகள் மட்டும் லட்சக்கணக்கில் சொத்து வரி கட்ட வேண்டும் என்று மிரட்டி வசூலிக்கும் நகராட்சி மாநகராட்சி அதிகாரிகளின் போக்கை கண்டித்து நடைபெறும்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில்...
அனைத்து பள்ளி நிர்வாகிகளும்,
ஆசிரியர்களும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் இருகரம் கூப்பி அழைக்கின்றேன்.
உங்கள் நலனுக்காக, உங்கள் உரிமைகளை மீட்டெடுத்திட, உங்கள் சொத்துக்களை பாதுகாத்திட பள்ளி நிர்வாகிகள் அனைவரும் ஒருவருக்கொருவர் தகவல் தந்து வேலூர் ராணிப்பேட்டை திருப்பத்தூர் மாவட்ட பள்ளி நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்...
நீங்கள் பயந்து ஒதுங்கி ஓட முதுகெலமில்லா பிராணி அல்ல என்பதை உணர்த்துங்கள்...
கோரிக்கை கள் ஈடேற... கோடி க்கைகள் போராட வாருங்கள்...
கே. ஆர். நந்தகுமார் மாநில பொதுச் செயலாளர்.