வசூல் வேட்டையில் தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர்கள்..... தமிழக அரசே நடவடிக்கை எடு...!

 வசூல் வேட்டையில் தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர்கள்..... தமிழக அரசே நடவடிக்கை எடு...!

 லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளே.. லஞ்சம் வாங்கும் டிஇஓ க்களை கைது செய்... டிஸ்மிஸ் செய்...

 வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் தாம்சன்,

 சேலம் மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார்

தனியார் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்குவதற்கு பல்லாயிரக்கணக்கில் பள்ளி நிர்வாகிகளை மிரட்டி லஞ்சம் வாங்குவதாக பல்வேறு பள்ளி நிர்வாகிகள் தொடர்ந்து புகார் அளித்து வருகிறார்கள்..

 நர்சரி பிரைமரி பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரம் வழங்க பரிந்துரைக்க நர்சரி பிரைமரி பள்ளிகளுக்கு  ரூபாய் 25,000 மெட்ரிக் பள்ளிகளுக்கு ரூ 50,000 சிபிஎஸ்இ பள்ளி களுக்கு

ரூ 1,50,000 லட்சம் என பள்ளி நிர்வாகிகளை கேட்டு மிரட்டி வசூலித்து வரும் இப்போக்கை வன்மையாக கண்டிக்கிறோம்.

 அதேபோல் திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர் சென்ற மாதம் நடந்து முடிந்த தொழில் பொருள்காட்சிக்கு தனியார் பள்ளிகள் 10 லட்ச ரூபாய் கட்ட வேண்டும் என்று உத்தரவு போட்டுள்ளார்.

புத்தக கண்காட்சிக்கு பணம் கொடு, தமிழரசு பத்திரிக்கைக்கு  அனைத்து பள்ளிகளும் ரூ 2000 கட்ட வேண்டும் என்று கடலூர் மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவு போடுகிறார்..

 பள்ளி நிர்வாகிகள் என்ன கள்ளச்சாராயமா காய்ச்சு கிறார்கள்....

 தயவு செய்து மாவட்ட கல்வி அலுவலர்கள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ளுங்கள். இல்லை என்றால் எமது மாநில சங்கம் நிச்சயம்..

 லஞ்ச ஒழிப்பு துறையிடம் பிடித்துக் கொடுக்கும். பின்னர் எங்கள் மீது வருத்தப்பட வேண்டாம்.

 உங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போஸ்டர் ஒட்டி போராட்டம் நடத்தி பத்திரிகையாளர்களை சந்தித்து புகார் அளிப்போம்..

 இது வேண்டுகோள் மட்டுமல்ல..

கடைசி எச்சரிக்கை...

 கே. ஆர். நந்தகுமார் மாநில பொது தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் CBSE பள்ளிகள் சங்கம்.