வைரஸ் காய்ச்சல் - 1-9 ஆம் வகுப்பு வரை இறுதி தேர்வை முன்கூட்டி நடத்த திட்டம்..!

 வைரஸ் காய்ச்சல் - 1-9 ஆம் வகுப்பு வரை இறுதி தேர்வை முன்கூட்டி நடத்த திட்டம்..!


தமிழகம் முழுவதும் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இறுதித் தேவை முன்கூட்டியே நடத்த தமிழக அரசு திட்டம்.

இந்தியா முழுவதும் இன்புளுயன்சா வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

வைரஸ் காய்ச்சல் பரவல்

அந்த வகையில் வைரஸ் காய்ச்சல் பரவலையடுத்து,  அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இறுதித் தேவை முன்கூட்டியே நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.


இறுதி தேர்வை முன்கூட்டி நடத்த திட்டம்

வைரஸ் காய்ச்சல் பரவல், கோடை வெயில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளிட்ட காரணங்களால் தேர்வுகளை முன்னதாக நடந்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏப்ரல் 30-ஆம் தேதி தேர்வுகளை முடிக்க திட்டமிட்டிருந்த நிலையில், ஏப்ரல் 24-ஆம் தேதிக்குள் முன்கூட்டியே தேர்வுகளை முடித்து, விடுமுறை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.