தனியார் பள்ளிகளுக்கு இரண்டு ஆண்டுகளாக அரசு தரவேண்டிய RTE கல்வி கட்டண பாக்கி தொகையை உடனே வழங்கிட வேண்டி கோரிக்கை மனு..,

தனியார் பள்ளிகளுக்கு  இரண்டு ஆண்டுகளாக அரசு தரவேண்டிய RTE கல்வி கட்டண பாக்கி தொகையை உடனே வழங்கிட வேண்டி கோரிக்கை மனு..,

 தமிழகத்தில் இயங்கி வரும் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சிறுபான்மையற்ற தனியார் நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகளில் அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி சட்டப்படி

 மத்திய, மாநில அரசு விதிப்படி அரசால் தேர்வு செய்யப்பட்ட 25 % மாணவர்கள் சுமார் 1,60,000 பேர் எமது தனியார் பள்ளிகளில் பயின்று வருகிறார்கள்.

அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகளால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச கல்வி கட்டணம் 2021..2022

 மற்றும் 2022..2023 ஆம் கல்வி ஆண்டிற்குரிய  கல்வி கட்டண பாக்கி மாநில அரசால் இன்னும் வழங்கப்படவில்லை..

அதனால் தனியார் பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்களுக்கு சம்பளம் தர முடியாமல், உயர்த்தப்பட்ட சொத்து வரி, மின் கட்டணம், தொழில் வரி, பள்ளி வாகனங்களுக்கான சாலை வரி, இருக்கை வரி, இன்சூரன்ஸ் கட்ட முடியாமல் பள்ளி வாகனங்களை  எப்.சி  செய்ய முடியாமல், வாங்கிய கடனுக்கு வட்டியும், தவணையும் செலுத்த முடியாமல்  மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளனர்.

எனவே மாண்புமிகு.தமிழக முதல்வர், மாண்புமிகு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், உயர்திரு. பள்ளிக்கல்வி த்துறை முதன்மைச் செயலாளர்  அவர்கள் மற்றும் உயர்திரு. தனியார் பள்ளிகள் இயக்குனர்,

RMSA/SSA இயக்குனர் பெருமக்கள் உடனடியாக தனியார் பள்ளிகளுக்கு அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி சட்டப்படி 25% மாணவர்களை

சேர்த்து கல்வி கற்பித்த வகையில் அரசு தரவேண்டிய இரண்டு ஆண்டுகளுக்கான நிலுவைத் தொகையை உடனே வழங்கிட வேண்டுமாய் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்சி பள்ளிகள் சங்கத்தின் சார்பில் பணிவோடு வேண்டுகிறோம்.

 ஓவ்வோ றாண்டும் நீதிமன்றத்தில் வழக்காடி போராட்டங்கள் நடத்தித்தான் கல்வி கட்டண பாக்கியை அரசிடமிருந்து பெற வேண்டும் என்ற நிலைக்கு தயவு செய்து தள்ளி விட வேண்டாம்.

சென்றாண்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டு வழங்கப்பட்ட தீர்ப்பின்படி ஒவ்வொரு ஆண்டும் மூன்று தவணைக ளாக தர வேண்டும் என்கிற தீர்ப்பையும் தாங்கள் கவனத்தில் கொள்ளவில்லை என்பதையும், சென்றாண்டு அரசு ஒதுக்கி ஆணையிட்ட  கட்டணத்தில் 25 சதவீதம் குறைத்து தந்ததையும்,பள்ளி நிர்வாகிகள் மிகுந்த மனவேதனையோடு அன்றைக்கு இருந்த பொருளாதார கஷ்டத்தின் காரணமாக ஏற்று கொண்டார்கள்.

அரசு ஒதுக்கிய நிதியில் பெரும் தொகையை  திரும்ப பெற்றதையும் வருத்தத்தோடு சுட்டிக் காட்டுகின்றனர்.

 இந்த கல்வி ஆண்டே முடியும் தருவாயில் இன்னும் ஆர்டிஇ நிலுவை கட்டணம் குறித்து எந்த தொகையும் ஒதுக்காமல், அரசாணை யும் வெளியிடாத நிலையில்..... மாவட்ட கல்வி அலுவலர்கள் தாங்கள் நடத்தும் கூட்டங்களில்  பள்ளி நிர்வாகிகளை மிரட்டும் தோணியில் கொரோனா காலத்தில் நிர்ணயி க்கப்பட்ட கல்வி கட்டணம் இருந்தால்தான் RTE கட்டணம் வழங்குவோம், எனவே உடனே கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்யுங்கள் என்றும், தொடர் அங்கீகாரம் இருந்தால் தான் கல்வி கட்டணம் நிர்ணிக்கப்படும்  என்றும் அச்சமுட்டுகிறார்கள்.. 

 இன்னும் விண்ணப்பித்து காத்திருக்க கூடிய பல்லாயிரக்கணக்கானோருக்கு தொடர் தற்காலிக அங்கீகாரம் வழங்காமல் இருப்பதும், கல்வி கட்டணம் நிர்ணயி க்காமல் இருப்பதும் தங்கள் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

 எனவே ஐயா அவர்கள் அருள் கூர்ந்து தனியார் பள்ளிகளின் தற்கால பொருளாதார கஷ்டங்களை சிக்கல்களை போக்கும் வகையில் அரசு தரவேண்டிய ஆர்டிஇ கல்வி கட்டண பாக்கியை உடனடியாக வழங்கி உதவிட வேண்டுமாய் பணிவோடு வேண்டுகிறோம்.

 இல்லை என்றால் தமிழகம் முழுக்க இருக்கக்கூடிய அனைத்து தனியார் பள்ளி நிர்வாகிகளும் இம்மாதம் 27.02.2023 திங்கட்கிழமை காலை 11 மணிக்கு தனியார் பள்ளிகள் இயக்குனரகம் முன்பு  மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்சி பள்ளிகள் சங்கம் முடிவெடுத்துள்ளதை தங்களின் மேலான கவனத்திற்கு தெரிவித்துக் கொள்கிறோம்...

என்று சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கே. ஆர். நந்தகுமார் தமிழக முதலமைச்சர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் இயக்குனருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.