மக்கள் செங்கல்லை கையில் எடுப்பதற்கு முன் எல்லோரும் ஓடிருங்க.....!?

 மக்கள் செங்கல்லை கையில் எடுப்பதற்கு முன் எல்லோரும் ஓடிருங்க.....!?

மக்கள் கையில் செங்கலை எடுப்பதற்கு முன்னாக மத்திய அரசு மதுரையில் எய்ம்ஸ் பணியை துவக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கல்லூரி திறப்பதற்கான கட்டுமான பணிகளை இன்னும் தொடங்காத நிலையில் திமுக அரசு இது குறித்து அவ்வப்போது மத்திய அரசை கேள்விகேட்டு வருகிறது. இதை வைத்து அரசியல் செய்து கொண்டுள்ளது.

இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இது குறித்து கூறியபோது மதுரையில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணிகளை தொடங்க அம்மாவட்ட மக்கள் கையில் செங்கலை எடுப்பதற்கு முன் மத்திய அரசு இந்த பணியை விரைவில் தொடங்க வேண்டும் என்று தெரிவித்தார். 

2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்த போது மதுரையில் மருத்துவமனை கல்லூரி குறித்து செங்கலை கையில் வைத்து பிரச்சாரம் செய்தேன். தற்போது அதை அனைவரும் பேச ஆரம்பித்துள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

அவரின் இந்த கூற்றுக்கு காரணமே யாராவது செங்கல் எடுத்து தம்மை அடித்து விடக்கூடாது என்கிற பயம் தான். ஏனென்றால் தெருவில் கிடந்த ஒரு செங்கல்லை எடுத்து முதல் பிரச்சாரத்தை தொடங்கியதே இவர்தான். இவரே இப்போது இப்படி பேசுவது மக்களை முட்டாள் ஆக்குவது போல் உள்ளது. வெறும் செங்கல்லை காட்டி விட்டு ஓட்டு வாங்கி வெற்றி பெற்றுவிட்டு ஒண்ணுமே செய்யாமல் இருந்தால் யார் தான் சும்மா இருப்பார்கள் மக்களின் கோபம் உங்கள் மீது திரும்பும் அல்லவா....? எனவே எச்சரிக்கையாக இருங்கள் கையலாகாதவர்களே....!!


அரசை கேள்வி