ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ரத்து....!?

 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ரத்து....!?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு சரியாக 9 நாட்களே உள்ள நிலையில் இடைத்தேர்தலை நிறுத்த மத்திய பாஜக அரசு அமலாக்கத்துறையை ஏவியுள்ளதாக டெல்லி ரிப்போர்ட்டுகள் தெரிவிக்கின்றன.

 கடந்த 2017 ஆம் ஆண்டு நடக்கவிருந்த ஆர்கே நகர் இடைத்தேர்தலை பணவினியோகம் காரணம் காட்டி தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. அப்போது, டிடிவி தினகரன் ஓட்டுக்கு நாலாயிரம் கொடுத்ததாக புகார் எழுந்தது. ஆனால் ஈரோடு கிழக்கில் ஒரு வாக்காளருக்கு ஒரு நாளைக்கே 2 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து வருகின்றனர்.

ஒரு ஓட்டுக்கு காலையில் 500, ஆயிரம் ரூபாய், மாலையில் 500 ரூபாய் அதுபோக அசைவ பிரியாணியுடன் மூன்று வேலையும் உணவு என வாக்காளர்களை தங்க சங்கிலியால் கட்டிபோட்டுள்ளதாம் திமுக. 

மொத்தம் உள்ள இரண்டரை லட்சம் வாக்காளர்களை வாக்கு பட்டியல் வாரியாக வெவ்வேறு குழுக்களாக பிரித்து ஒவ்வொரு குழுவுக்கும் 100 க்கும் மேற்பட்ட சூப்பர்வைசர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

தலைக்கு பத்தாயிரம் கொடுத்து பத்து நாட்களுக்கு புக்கிங் செய்யப்பட்டுள்ளதால் அதிமுக பிரச்சாரத்தில் பாதி நாற்காலிகள் காலியாக கிடக்கின்றன.

தொகுதியில் உள்ள ஓட்டு போடும் மக்களை எங்கு கடத்தி போய் வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. தெருவுக்குள் ஓட்டு கேட்க சென்றால் வீட்டில் யாரும் இருப்பதில்லை என்கிற புகார் பரவலாக எழுந்துள்ளது.

இங்கு பல ஆண்டுகளாக தறி நெசவு செய்து கொண்டுள்ள தொழிலதிபர்கள் தங்களின் தொழிலாளர்களை காணவில்லை என்று தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

 தொகுதி மக்கள் அனைவருக்கும் பீர், மோர், கறி விருந்து காசு கொடுத்து ஒரு கட்சியின் அடிமைகள் போல் ஆடு மாடுகளை அடைத்து வைப்பது போல் ஒரு கூண்டுக்குள் அடைத்து வைத்துள்ளனர் என்கிற புகார் தொகுதி முழுக்க கேட்கின்றது.

ஒரு நாளைக்கே ஒரு கோடி ரூபாய் வரை செலவு செய்து வருவதால் தற்போது வரை ஈரோடு கிழக்கில் ஒரு லட்சம் வாக்காளர்களை திமுக தன்வசப்படுத்திவிட்டது.

 மீதம் உள்ளவர்களை கடைசி நேரத்தில் வழங்கப்படவுள்ள 6 ஆயிரம் ரூபாய் மூலம் கவர் செய்து விடும் என்கின்றனர். இந்நிலையில், சொந்த வாக்காளர்களையாவது காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு அதிமுக தள்ளப்பட்டுவிட்டது. 

ஆனால், முன்னாள் அமைச்சர்கள் பலர் நிதி இல்லை என்று கைவிரித்துவிட, முன்னாள் 'மணி' அமைச்சர்கள் மூன்று பேர் கரம் கொடுத்து 40 கோடி ரூபாய் வரை திரட்டப்பட்டுள்ளது. அதிலும் எடப்பாடியின் பணம்தான் அதிகமாம்.

இந்த நிலையில், திமுக - அதிமுகவின் தேர்தல் செலவுகள், பண விநியோகம் மற்றும் ஒரு நாளைக்கு என்னென்ன விதிமீறல்கள் நடக்கிறது என்பதை மத்திய அரசின் அமலாக்கத்துறை கிளியர் ரிப்போர்ட்டை டெல்லி மேலிடத்தில் வழங்கியுள்ளதாம்.

 அதை வைத்து இடைத்தேர்தலை நிறுத்த தேர்தல் ஆணையத்துக்கு கொஞ்சநேரம் கூட ஆகாது.

அடுத்த வருடம் பாராளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் எதிர்கட்சிகளை ஒன்று திரட்டி பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க திமுக தீவிரம் காட்டி வருகிறது. மேலும், முந்தைய பாராளுமன்ற தேர்தலிலும் மோடியை ஸ்டாலின் கடுமையாக விமர்சித்திருந்தார். 

இந்த தேர்தல் வெற்றியை வைத்து தான் பாராளுமன்ற தேர்தலில் தங்கள் செல்வாக்கு காட்ட முடியும் என்று ஸ்டாலின் நினைக்கிறார். இதில் தோல்வி அடைந்தால் தமது பாராளுமன்ற தேர்தல் கனவு தகர்ந்து போய்விடும்  என்று நம்புகிறார்.

அதற்காக தமது பாரம்பரிய அயோக்கியத்தனங்கள் அனைத்தையும் அரங்கேற்ற திமுக தயாராகிவிட்டது.  இந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் பொருத்தவரை அதிமுக வா...? திமுக வா...? என்பது கணக்கல்ல... மோடியா...? ஸ்டாலினா....? என்பதாகத்தான் இருக்கின்றது.

இப்படி இருக்கும் சூழ்நிலையில் இதற்கெல்லாம் பாடம் புகட்ட சரியான நேரம் அதுவும் ஆதாரத்துடன் வந்தால் டெல்லி சும்மாவா இருக்கும் என்கின்றனர்.

 ஒரு ஓட்டுக்கு 4 ஆயிரம் ரூபாய் கொடுத்த புகாரில் ஆர்.கே. நகர் இடைதேர்த்தலை தேர்தல் ஆணையம் நிறுத்திவைக்கும்போது, ஒரு நாளைக்கு கோடி ரூபாய்க்கு மேல் புழங்கும் ஈரோடு கிழக்கு இடைதேர்த்தல் எப்போது வேண்டுமானாலும் நிறுத்தப்படலாம்....

பிப்ரவரி 27ஆம் தேதிக்குள் எது நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை...?!

.