விற்பனை பத்திரம்‌ பெறாத நபர்கள் கவனத்திற்கு.....!

 விற்பனை பத்திரம்‌ பெறாத நபர்கள் கவனத்திற்கு.....!

வீடு, மனை ஒதுக்கீடு பெற்று முழுத்‌ தொகை செலுத்தி, விற்பனை பத்திரம்‌ பெறாத நபர்கள் அதனை பெற்றுக் கொள்ளலாம்.

இது தொடர்பாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்‌, ஒசூர்‌ வீட்டு வசதி பிரிவு, தருமபுரி மாவட்டத்தில்‌ வீடு, மனை ஒதுக்கீடு பெற்று முழுத்‌ தொகை செலுத்தி, விற்பனை பத்திரம்‌ பெறாத ஒதுக்கீடுதாரர்களுக்கு 21-02-2023, 22-02-2023 மற்றும்‌ 23-02-2023 ஆகிய நாட்களில்‌ விற்பனை பத்திரம்‌ வழங்கும்‌ விழா ஒசூர்‌ வீட்டு வசதி பிரிவில்‌ நடைபெற உள்ளது.

முழுத்தொகை செலுத்திய ஒதுக்கீடுதாரர்கள்‌ நடைபெறவுள்ள விற்பனை பத்திரம்‌ வழங்கும்‌ விழாவில்‌ கலந்துகொண்டு, அனைத்து ஆவணங்களுடன்‌, வாரிய விதிமுறைகளை பின்பற்றி இந்த அரிய வாய்ப்பை ஒதுக்கீடுதாரர்கள்‌ பயன்படுத்தி விற்பனை பத்திரம்‌ பெற்றுக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர்‌ தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்‌.