உலகின் மிகச் சிறந்த புத்திசாலி .....! மீண்டும் நிரூபித்த இந்திய வம்சாவளி சிறுமி!!
உலகின் மிகச் சிறந்த புத்திசாலி மாணவருக்கான போட்டியில், அமெரிக்காவில் வசிக்கும் சென்னை சேர்ந்த சிறுமி, 8ம் வகுப்பு படிக்கும் அதி புத்திசாலி மாணவர்களின் புத்திக்கூர்மையில், 90 சதவீதத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.
அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள புளோரன்ஸ் எம் கவுடினியர் நடுநிலைப்பள்ளியில் படித்து வரும் நடாஷா பெரியநாயகத்தின் வயது 13. இவரது பெற்றோர்கள் சென்னையில் இருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தவர்கள். வகுப்பில் திறமையான மாணவியாக திகழும் நடாஷா 2021 இல் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் இளைஞர் திறன் மையத்தின் தேர்வை எழுதியுள்ளார்.உலகெங்கும், 76 நாடுகளைச் சேர்ந்த, 15,300 பேர் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் தாங்கள் வகுப்பைவிட உயர்ந்த வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு இணையான கற்கும் திறன், அதை வெளிப்படுத்தும் திறன் கொண்டவர்களா என்பதை ஆராய்கின்றனர். அப்படி சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படுகின்றன.
இந்தநிலையில், 2021 இல் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த நடாஷா, 8 ஆம் வகுப்பு மாணவர்களின் திறனில் 90 % வரை வெளிப்படுத்தியுள்ளார். 13, சிறப்பிடத்தைப் பிடித்து தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக உலகின் மிகச் சிறந்த புத்திசாலி மாணவியாக இடம்பிடித்துள்ளார். அவரது கணித மற்றும் செயல்பாட்டு திறன் அவரது புத்தி கூர்மைக்கு இந்த சிறப்பு அந்தந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு நடந்த போட்டியிலும், இவர் பங்கேற்று சிறப்பிடம் பெற்றது குறிப்பிடத்தக்கது. நடாஷா தனது சமீபத்திய முயற்சியில், SAT (ஸ்காலஸ்டிக் ஆப்டிட்யூட் டெஸ்ட்) மற்றும் CTY திறமை தேடல் என்று பல தேர்வுகளை எழுதியதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அதேபோல சமீபத்திய முயற்சியில் மற்ற தேர்வர்களை விட நடாஷா அதிக மதிப்பெண்களைப் பெற்றார் என்றும் குறிப்பிட்டுள்ளது.
மொத்த மாணவர்களில் இருந்து இறுதிப் பட்டியலில் 27 சதவீதம் மாணவர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். அவர்களில் நடாஷாவும் ஒருவர் என்ற பெருமையை பெற்று உள்ளார். இறுதி பட்டியலில் இடம்பெற்றது பெரும் மகிழ்ச்சியை அளிப்பதாக கூறிய நடாஷா தனது ஓய்வு நேரத்தில் ஜே.ஆர்.ஆர் டோல்கீனின் நாவல்களை படிப்பதையும் டூடுலிங் செய்வதையும் விரும்புவதாகக் கூறினார்.