2,00,000 வேலைவாய்ப்புகள்! மத்திய அரசு அறிவிப்பு!

 2,00,000 வேலைவாய்ப்புகள்! மத்திய அரசு அறிவிப்பு!

அங்கன்வாடி மையங்களில் பணியாளர்கள், உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்காக மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு வேலைகளில் ஆர்வம் காட்டும் நாம், மத்திய அரசு வேலை வாய்ப்புகள் பற்றிய புரிதலும், விழிப்புணர்வும் இல்லாமல் இருக்கிறோம். அதனால உடனே இந்த வேலை வாய்ப்புக்கு அப்ளை பண்ணுங்க. மத்திய அரசு வேலைவாய்ப்பு என்றாலும், தமிழகத்தில் மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் 49,499 முதன்மை அங்கன்வாடி மையங்கள், 4940 குறு அங்கன்வாடி மையங்கள் என 54,439 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. தேசிய அளவில் அங்கன்வாடிகளின் எண்ணிக்கை 13.9 லட்சமாக உள்ளன.

இந்நிலையில், அங்கன்வாடி மையங்களில் உள்ள காலியிடங்கள் குறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி, இந்த காலி பணியிடங்களை நிரப்ப உள்ளதாக பதிலளித்துள்ளார்.

தமிழகத்தில் 54,439 அங்கன்வாடி பணியாளர் இடங்கள் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது 44,628 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன என்றும், 49,499 உதவியாளர் இடங்கள் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், 40,036 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன என்றும் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இரண்டு பதவிகளிலும் கிட்டத்தட்ட 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. தேசிய அளவில், 1, 27,891 அங்கன்வாடி பணியாளர் இடங்களும், 1,14,287 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்ப்டாமல் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.