100 நாள் வேலை திட்டத்தில் ஆதார் இணைப்பு...! ராகுல் காந்தியின் கோமாளித்தனமான பேச்சு....!!
ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஆதார் இணைப்பை கட்டாயம் ஆக்கினால் 57% ஏழைகள் பாதிக்கப்படுவார்கள் தங்களின் அன்றாட ஊதியத்தை இழப்பார்கள் இன்று ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கடந்த மாதம் 1ம் தேதி தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை வெகுவாக குறைத்துள்ளது.
ஆதாரை இணைப்பதன் மூலம் சமூகத்தில் ஏழை பிரிவுகளுக்கு எதிராக ஆதாரை தவறாக அரசு பயன்படுத்துகிறது. கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமான இந்த திட்டத்தை மத்திய அரசு தனது அடக்குமுறை கொள்கைகளுக்கு பலி கொடுத்து விட்டது.
மேலும் ஆதார் இணைப்பை கட்டாயம் ஆக்கினால் 57% கிராமப்புற தொழிலாளர்கள் தங்களின் அன்றாட வேலைவாய்ப்பு இருப்பார்கள்.
இதை ஒழித்து விட்டு புதிய வேலை வாய்ப்பு வழங்குவதற்கு எந்த கொள்கையும் அரசிடம் இல்லை. இந்த அரசின் ஒரே கொள்கை ஏழை மக்களை தொல்லை செய்வதுதான் என்று காங்கிரஸ் கட்சியை சார்ந்த ராகுல் காந்தி கூறியுள்ளார்.
இவர் எப்படிப்பட்ட மோசடியான தலைவர் என்பதை அவரின் இந்த கூற்றின் மூலமே நாம் தெரிந்து கொள்ளலாம்.
இந்த உலகத்தில் எந்த ஒரு முட்டாளைக் கேட்டாலும் உலகிலேயே மிகவும் மோசமான வேலை எது என்று கேட்டால் அது இந்த ஊரக வேலைவாய்ப்பு திட்டம் தான். 100 நான் வேலைவாய்ப்பு திட்டம் தான் என்று சொல்வார்கள். அந்த அளவிற்கு இந்த வேலையை பார்த்தவர்கள் தினம் தினம் மனம் வெறுத்துப் போய் உள்ளனர் .
இந்த திட்டம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து இதில் ஏராளமான ஊழலும் ஊதாரித்தனமும் எல்லாவிதமான அயோக்கியத்தனங்களும் நடந்து கொண்டுள்ளதை நாடே நன்கறியும்.
இதில் வேலை செய்யும் ஊழியர்கள் அனைவருக்கும் தற்போது வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதால் இவர்களுக்கு சேர வேண்டிய ஊதியம் இப்போதுதான் ஓரளவிற்கு இவர்கள் கைகளுக்கு சென்று கொண்டுள்ளது.
இவர்களுக்கெல்லாம் வங்கி கணக்கில்லாத போது இந்தியா டிஜிட்டல் மயம் ஆகாத போது இதில் அடித்த கொள்ளை எவ்வளவு....? மக்களுக்கு சேர வேண்டிய ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை தின்று விட்டார்கள் அல்லவா....?! அதற்கெல்லாம் மோடி தலைமையிலான இந்த மத்திய அரசு முடிவு கட்டியுள்ளது.
அதன் வரிசையில் தான் இப்போது இன்னும் இருக்கிற சில அயோக்கியத்தனங்களை முறித்து எறிவதற்கு ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்கிற அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளது. இதில் என்ன தவறு இருக்கிறது....?
தவறு செய்பவர்களை ஒழித்தால் தான் ஒரு திட்டத்தை நல்லபடியாக நிறைவேற்ற முடியும். இதில் இந்திய பிரதமர் மோடி உறுதியாக இருக்கிறார். இதில் ராகுல் காந்திக்கு என்ன வந்தது...? ஏன் வந்தது....? அவர் ஏன் இன்னும் அமுல் பேபியாகவே இருக்கிறார்...?
இதற்கெல்லாம் காரணம் ஓட்டு பிச்சை தான்....! ஊராட்சி மன்ற தலைவர் தொடங்கி பிரதமர் வேட்பாளர் வரை எல்லோருமே இதில் ஓட்டுக்காக தான் ஆட்களை சேர்க்கிறார்களே தவிர நாட்டு நலனுக்காக மக்களின் வாழ்வாதாரம் பெருக வேண்டும் என்பதற்காக யாரையும் சேர்ப்பதில்லை.
வாக்காளர் பட்டியலில் கள்ள ஓட்டு சேர்ப்பது போல் இதிலும் சேர்த்து வைத்துள்ளார்கள். இதில் முழுமையான கலை எடுக்க வேண்டும் என்று சொன்னால் ஆதாரை இணைப்பது தான் ஒரே வழி....!
அதை வேண்டாம் என்று ஒரு தலைவர் சொல்கிறார் என்றால் அவரைவிட படு வடி கட்டின முட்டாள் இந்த உலகத்தில் வேறு யாரும் இருக்க முடியாது...!?
அவரை எல்லாம் ஒரு தலைவராக ஒரு பிரதமர் வேட்பாளராக இந்த நாடு ஏற்றுக் கொண்டால் அந்த நாடு படுபாதாளத்தில் போய் தான் விழும். மக்களே எச்சரிக்கையாக இருங்கள்....!!