பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டுமா? ஆன்லைனில் விண்ணப்பிக்க Simple Steps

 பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டுமா? ஆன்லைனில் விண்ணப்பிக்க Simple Steps

நீங்கள் வெளிநாடுகளுக்கு செல்ல நினைத்தால் உங்களுக்கு பாஸ்போர்ட் கட்டாயம் தேவைப்படும். இதனை பெற நீங்கள் இடைத்தரகர்கள் யாரையும் தேட வேண்டாம். வீட்டில் இருந்தவாறு ஆன்லைன் முறையில் விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

பாஸ்போர்ட்:

நீங்கள் தற்போது வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டுமென்றால் சில நாடுகளை தவிர்த்து மற்ற அனைத்து நாடுகளுக்கும் நீங்கள் பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டியது கட்டாயமாகும். இந்த பாஸ்போர்ட் பெற விரும்பும் நபர்கள் இடைத்தரகர்களிடம் சென்று தங்களின் பணத்தை இழக்க வேண்டாம். நீங்கள் வீட்டில் இருந்தவாறு ஆன்லைன் முறையில் விண்ணப்பித்து கொள்ளலாம்.

நாட்டில் தற்போது அனைத்து துறைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது, நீங்கள் பாஸ்போர்ட் பெற ஆன்லைன் மூலமாக எளிய வழிமுறைகளை பின்பற்றி விண்ணப்பிக்கலாம். ஆனால் உங்களின் தனிப்பட்ட விவரங்களை சமர்ப்பிக்கும் போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் முறை:

1. நீங்கள் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க https://www.passportindia.gov.in/ என்ற இணையதளத்திற்குச் செல்லவும்

2. இப்போது உங்களுக்கான கணக்கை தொடங்கி பதிவு செய்ய வேண்டும்.

3. இதனை தொடர்ந்து, உங்களின் பெயர், முகவரி, மின்னஞ்சல் ஐடி, மொபைல் எண், பிறந்த தேதி உள்ளிட்ட தகவல்களை நிரப்ப வேண்டும்.

4. அடுத்ததாக Passport Seva என்ற விருப்பத்திற்குச் சென்று, Continue என்பதை கிளிக் செய்யவும். இப்போது Apply for Fresh Passport/Reissue of Passport என்பதை தேர்வு செய்யவும்.

5. இதையடுத்து Click Here To Fill என்பதை கிளிக் செய்ததும், அடுத்த பக்கம் தோன்றும்.

6. இப்போது Submit என்ற பொத்தானைக் கிளிக் செய்து, உங்களின் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். அதன் பிறகு அருகிலுள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு செல்ல அப்பாயின்ட்மென்ட் வாங்கி கொள்ளவும்.

7. இப்போது உங்களுக்கான கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். அதன் பிறகு, உங்களின் விண்ணப்பக் கட்டணத்துடன் சேர்ந்து விண்ணப்ப படிவத்தை PDF வடிவில் பதிவிறக்கம் செய்துக்கொள்ளுங்கள்.

8. அடுத்ததாக உங்களுக்கு அப்பாயிண்ட்மெண்ட் கிடைத்தவுடன் அருகிலுள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு உங்களின் அடையாள அட்டை, கல்விச் சான்றிதழ் மற்றும் பிற ஆவணங்களை எடுத்து செல்ல வேண்டும்.

9. இவ்வாறு அனைத்து செயல்முறைகளும் முடிவடைந்த பிறகு, Police Verification நடைபெறும்.

10. இறுதியாக மேற்கண்ட அனைத்து நடைமுறைகளும் முடிவடைந்த பிறகு உங்களுக்கு எளிதாக பாஸ்போர்ட் கிடைத்துவிடும்.

.