புதன்கிழமை பள்ளிகள் திறக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்...!!

 புதன்கிழமை பள்ளிகள் திறக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்...!!

செவ்வாய்கிழமை விடுமுறை முடிந்து புதன்கிழமை பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் புதன்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. 

தமிழகத்தில் புதன்கிழமையன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அப்படி ஒரு முடிவு எதுவும் எடுக்வில்லை என தெரிவித்துள்ளார். சனிக்கிழமை போகி பண்டிகை, ஞாயிற்றுக் கிழமை பொங்கல் பண்டிகை, திங்கள் கிழமை மாட்டு பொங்கல் கொண்டாடப்பட்டது. செவ்வாய் கிழமை காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. இவை அனைத்தும் தமிழக அரசின் விடுமுறை தினங்களாகும்.

ஜனவரி 18ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார். பொங்கலுக்கு பின் புதன்கிழமை விடுமுறை அளிப்பது குறித்து அரசு முடிவெடுக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்..

தமிழக மக்களிடம் தற்போது புதிய வியாதி ஒன்று பரவி வருகிறது. நான்கு நாட்கள் ஒரு சேர விடுமுறை விடுவதற்கு இல்லை அதற்கு முன்பு ஒரு நாளும் அதற்கு பின்பு ஒருநாளும் விடுமுறை வேண்டும் என்று கேட்பது வாடிக்கையாக்கிவிட்டது.

 இந்த வியாதி மக்களுக்கு இருக்கிறதோ இல்லையோ தெரியவில்லை ஆனால் ஊடகங்கள் இடையே பெருமளவு பரவி உள்ளது. யார் தான் இப்படி உசுப்பேத்தி விடுகிறார்களோ தெரியவில்லை. ஆளாளுக்கு அறிக்கை வாசிக்க தொடங்கி விடுகிறார்கள்.

 இதையெல்லாம் முறியடித்து புதன்கிழமை பள்ளிகள் செயல்படும் என்று அறிவித்துள்ள பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேசை பாராட்டத்தான் வேண்டும்.

Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்