அன்பழகன் நூற்றாண்டு விழா நிறைவு பொதுக்கூட்டம்

 அன்பழகன் நூற்றாண்டு விழா நிறைவு பொதுக்கூட்டம்


ஓசூர் மாநகர தி.மு.க.சார்பில் பேராசிரியர் க அன்பழகன் நூற்றாண்டு விழா நிறைவு பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.

ஓசூர் ராம் நகர் அண்ணா சிலையருகே நடந்த பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு, மாநகர செயலாளரும், மேயருமான எஸ்.ஏ. சத்யா தலைமை தாங்கினார். துணை மேயர் ஆனந்தய்யா மற்றும் நிர்வாகிகள்  முன்னிலை வகித்தனர்.  . இதில், திராவிட இயக்க சிந்தனையாளர் நாஞ்சில் சம்பத் மற்றும் மேற்கு மாவட்ட செயலாளரும் ஓசூர் எம்.எல்.ஏவுமான ஒய்.பிரகாஷ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மேலும் இதில், மாநில இளைஞரணி துணை செயலாளர் பி.எஸ்.சீனிவாசன் மற்றும் மாநில,மாவட்ட, மாநகர, கட்சி நிர்வாகிகள் மற்றும் சார்பு அணிகளின் பொறுப்பாளர்கள், கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

E. V. Palaniyappan