ராயக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா, பொங்கல் விழா
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் கல்வி மாவட்டம் ராயக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலை நிலைப்பள்ளியின் ஆண்டு விழா, பொங்கல் விழா, பள்ளியின் முன்னால் மாணவ, மாணவியர் சந்திப்பு விழா முதல்நாள் இன்று காலை பொங்கல் வைத்து விளையாட்டு போட்டிகள் நடந்தது அதன் தொடர்ச்சியாக நடந்த பள்ளி ஆண்டு விழாற்கு வந்த அனைவரையும் உதவி தலைமை ஆசிரியர் கா.முருகன் வரவேற்று பேசினார் பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன் தலைமை தாங்கினார் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கே.என்.ஆர்.நாகராஜன், செயலாளர் குஜ்ஜப்பன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மகேஸ்வரி வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் சிறப்பு விருந்தினராக முதன்மை கல்வி அலுவலர் கா.பெ.மகேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலர்கோவிந்தன், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவர் ச.வடிவேலு ஆகியோர்கள் கலந்துக்கொண்டு மாணவர்களை ஊக்குவித்து வாழ்த்தி பேசினர்.
கடந்த ஆண்டு 10, 12-ம் வகுப்பில் முதல் மூன்று இடம்பிடத்த மாணவர்களுக்கு ஊக்க பரிசும், விளையாட்டு போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர் நிகழ்ச்சி களைமுதுகலை ஆசிரியர் ஜெ.மோகன் தொகுத்து வழங்கினார். இன்று 1962 முதல் 2022 வரை படித்த முன்னால் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைப்பெற உள்ளது இறுதியாக உதவுதலைமை ஆசிரியை (இடைநிலை) கலாவதி நன்றி கூறினார்.