ராயக்கோட்டையில் முன்னால் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் சந்திப்பு

 ராயக்கோட்டையில் முன்னால் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் சந்திப்பு

ராயக்கோட்டை, ஜன.10 - கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் கல்வி மாவட்டம் ராயக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1962 - முதல் 2022 வரை பள்ளியில் பணிபுரிந்த முன்னால் ஆசிரியர்கள், பள்ளியில் படித்த மாணவ, மாணவிகள், கடந்த 60 ஆண்டுகால மலரும் நினைவுகளுடன் அவர் அவர்களுடைய வகுப்பு ஆசிரியர்கள், வகுப்பு மாணவர்களுடன் அன்பை மரிமாரிக் கொண்டனர்.

 முன்னதாக முன்னாள் மாணவர் தொழில் அதிபர் ஆர்.எம்.முனிரத்தினம் அனைவரையும் வரவேற்று பேசினார் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நாகராஜன், செயலாளர் குஜ்ஜப்பன். மேலாண்மை குழதலைவி மகேஸ்வரி ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர் நிகழ்சியில் முன்னால் மாணவர்கள் தளி சட்டமன்ற உறுப்பினர் டி.ராமச்சந்திரன், முன்னால் எம்.பி. சி.நரசிம்மன், மருத்துவர் டாக்டர் ராஜேந்திரன், ஓய்வுபெற்ற வனத்துறை அதிகாரி தூருவாசன், முன்னால் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க மாநில செயலாளர் நந்தகுமார்,ஒய்வு பெற்ற ஆசிரியர் கோபால், உட்பட ஆசியர்கள், ஏராளமான முன்னாள் மாணவ, மாணவிகள் கலந்துக்கொண்டு கடந்தகால மலரும் நினைவுகள் குறித்து ஒவ்வொருவரும் அன்பை வெளிபடுத்திக்கொண்டனர் சிறப்பு விருந்தனர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது, நிகழ்ச்சி ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் சீனிவாசன், உதவி தலைமை ஆசிரியர் முருகன் மற்றும் இருபால் ஆசிரியர்கள் செய்திருந்தனர். நிகழ்சியை முதுகலை ஆசிரியர் ஜெ.மோகன் தொகுத்து வழங்கினார் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் நீக்கம்.
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்