இராணுவ பள்ளியில் B.Ed/M.Ed முடித்தவர்களுக்கானபுதிய வேலை வாய்ப்பு!

 இராணுவ  பள்ளியில் B.Ed/M.Ed முடித்தவர்களுக்கானபுதிய வேலை   வாய்ப்பு!

ARMY PUBLIC SCHOOL என்பது CBSE உடன் இணைந்த சீனியர் செகண்டரி பள்ளியாகும். இப்பள்ளியில் HEAD MASTER/HEAD MISTRESS பணிக்கு நல்ல தொழில்முறை அறிவு மற்றும் தகவல் தொழில்நுட்ப திறன்களைக் கொண்ட அனுபவம் வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 16.01.2023-க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் பட்டதாரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தொடக்கக் கல்வியில் B.Ed/M.Ed அல்லது B.El.Ed/Diploma 50% மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.

CBSE-யால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் குறைந்தபட்சம் 05 வருடங்கள் கற்பித்தல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். IT/கணினி தெரிந்தவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 55-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

இந்த பள்ளி பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வம் உள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 16.01.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.