முனியசாமி தலைமையில் எம்ஜிஆரின் 106 வது பிறந்தநாள் விழா

 முனியசாமி தலைமையில் எம்ஜிஆரின் 106 வது பிறந்தநாள் விழா

தமிழகத்தில் ரிக்க்ஷா தொழிலாளர்களுக்கு மலைகோட்டு கொடுத்து கலைவாணர்           என்எஸ்கே வீட்டை ஏலத்தில் இருந்து மீட்டுக் கொடுத்து, தனுஷ்கோடி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண வழங்கி, கமலா சர்க்கஸ் தீ விபத்து நிவாரணம், பெங்களூரு அனாதைப் பள்ளியின் வளர்ச்சியில் வாரி வாரி வழங்கியது உள்ளிட்ட ஏழை எளியோருக்கு தோழனாக விளங்கிய தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 106 வது பிறந்த நாளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளரும், மத்திய கூட்டுறவு சங்கத் தலைவருமான முனியசாமி தலைமையில் ராமநாதபுரம் நகர் கழக செயலாளர் பொறியாளர் பால்பாண்டி முன்னிலையில், மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் இதயதெய்வம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செய்யப்பட்டது. இதனை அடுத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட அவைத்தலைவர் சுவாமிநாதன், முன்னாள் நகர்மன்றத் தலைவர் ராமமூர்த்தி,ராமநாதபுரம் மூத்த உறுப்பினரும் 30வது வார்டு கழகப் பிரதிநிதியுமான எம்.ரத்தினம்,மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் தர்வேஸ் மாவட்ட விவசாய அணி செயலாளர் ராதா கிருஷ்ணன் மாவட்ட துணை செயலாளர் ராம சேது, அம்மா பேரவை செயலாளர் பாலசிங்கம், ராமநாதபுரம் 33வது வார்டு செயலாளர் முருகன் நகர் துணை செயலாளர் நாகஜோதி, 10வது வார்டு ரவி மற்றும் அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட பிற அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு புரட்சித் தலைவரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இதற்கான ஏற்பாட்டினை ராமநாதபுரம் நகர் கழகச் செயலாளர் சகோதரர் பொறியாளர் பால்பாண்டி சிறப்பாகச் செய்திருந்தார். இதனை அடுத்து ராமநாதபுரம் 30வது வார்டு கழக பிரதிநிதியும் கழக மூத்த உறுப்பினருமான எம். ரத்தினம், நகர் செயலாளர் பொறியாளர் பால்பாண்டியன் அலுவலகத்தில் தமிழக முன்னாள் முதல்வர் பொன்மனச் செம்மல் டாக்டர். எம்ஜிஆர் அவர்களின்திரு. உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.   

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N.அன்வர் அலி