இனி இஷ்டத்துக்கு Google Pay, Paytm-ஐ யூஸ் பண்ண முடியாது!

இனி இஷ்டத்துக்கு Google Pay, Paytm-ஐ யூஸ் பண்ண முடியாது!


கூகுள் பே (Google Pay). பேடிஎம் (Paytm), போன்பே (PhonePe) போன்ற யுபிஐ ஆப்களை பயன்படுத்துபவர்களுக்கு 2 புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் பே, பேடிஎம், போன்பே போன்ற யுபிஐ ஆப்கள் ஆனது நமது வாழ்க்கைத் தரத்தை கணிசமாக மேம்படுத்தியுள்ளது என்பதில் சந்தேகமே வேண்டாம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India - NPCI) அறிமுகப்படுத்திய யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (Unified Payments Interface - UPI) ஆனது பணப்பரிமாற்றங்களை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு எளிமையாகவும், பாதுகாப்பாகவும் மாற்றி உள்ளது.

இருப்பினும் கூட, அணுகல்தன்மை (Accessibility) காரணமாக இந்திய அரசாங்கம் யுபிஐ ஆப் பயனர்களுக்கு 2 புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது!

இந்திய அரசாங்கம் அறிவித்துள்ள முதல் கட்டுப்பாடு ஆனது யுபிஐ ஆப்கள் வழியாக அனுப்பப்படும் மொத்த தொகையோடு (Total Amount) தொடர்புடையது.

NPCI-யின் புதிய விதிமுறையின் படி, ஒரு நபர் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ரூ.25,000 முதல் ரூ.1 லட்சம் வரையிலான தொகையை மட்டுமே UPI ஆப்கள் வழியாக அனுப்ப முடியும்.

அதாவது கனரா வங்கி (Canara Bank) போன்ற சிறிய வங்கிகள் ரூ.25,000 வரை என்கிற வரம்பை நிர்ணயம் செய்துள்ளன. அதேசமயம் எஸ்பிஐ (SBI Bank) போன்ற பெரிய வங்கிகள் ஆனது தினசரி யுபிஐ பரிவர்த்தனை வரம்பை ரூ.1,00,000 என்று நிர்ணயம் செய்துள்ளன. அதாவது இந்த வரம்பு - வங்கிக்கு வங்கி மாறுபடும் என்று அர்த்தம்!

NPCI-யின் இரண்டாவது கட்டுப்பாடு ஆனது ஒரு நாளைக்கு எத்தனை முறை யுபிஐ ஆப்களை பயன்படுத்தி பணப்பரிமாற்றம் செய்யலாம் என்பதோடு தொடர்புடையது!

இனிமேல் யுபிஐ ஆப்களை பயன்படுத்தி - ஒரு நாளைக்கு இருபது பரிமாற்றங்களை (அதிகபட்சம்) மட்டுமே செய்ய முடியும், இந்த கட்டுப்பாட்டை மீறிய பிறகு, மறுபடியும் ஒரு பணபரிமாற்றத்தை செய்ய நீங்கள் 24 மணிநேரம் காத்திருக்க வேண்டும்.

இங்கே இருக்கும் ஒரே ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் - இந்த வரம்பு உங்களுடைய வங்கியின் கொள்கைகளை பொறுத்து வேறுபடலாம் என்பதே ஆகும்!

சுருக்கமாக GPay என்று அழைக்கப்படும் Google Pay ஆப்பிற்கான தினசரி பரிவர்த்தனை வரம்பு ரூ.1,00,000 ஆகும். மேலும் இது அனைத்து UPI ஆப்கள் மற்றும் வங்கிக் கணக்குகளிலும் ஒரு நாளைக்கு மொத்தம் 10 பரிவர்த்தனைகளை மட்டுமே அனுமதிக்கும்.

PhonePe ஆப்பிற்கான தினசரி பரிவர்த்தனை வரம்பு ரூ.1,00,000 ஆகும். இருப்பினும் இந்த வரம்பு உங்களுடைய வங்கிக்கு ஏற்ப மாறுபடலாம். மேலும் ஒவ்வொரு நாளும் PhonePe மூலம் அதிகபட்சமாக 10 அல்லது 20 பரிவர்த்தனைகளை மட்டுமே செய்ய முடியும்.

Paytm ஆப்பிற்கான தினசரி பரிவர்த்தனை வரம்பு ரூ.1,00,000 ஆகும். பேடிஎம் ஆப்பின் டெய்லி லிமிட்டை பொறுத்தவரை, ஒரு நாளுக்கு அதிகபட்சமாக 20 முறை மட்டுமே பணபரிமாற்றங்களை செய்ய முடியும்!